உள்ளூர் செய்திகள்

கொரோனா வைரஸ்

தமிழகத்தில் மேலும் 1461 பேருக்கு கொரோனா பாதிப்பு

Update: 2022-06-27 14:43 GMT
  • தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் வேகம் எடுத்துள்ளது.
  • தமிழகத்தில் நேற்று 1,472 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

சென்னை:

தமிழகத்தில் கடந்த 24 மணி நேர கொரோனா பாதிப்பு விவரத்தை மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:

தமிழகத்தில் புதிதாக 1,461- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 34 லட்சத்து 69 ஆயிரத்து 805 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து இன்று குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 697 ஆக உள்ளது. கொரோனா பாதிப்பால் இன்று உயிரிழப்பு இல்லை. இதுவரை 38 ஆயிரத்து 26 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 7,458 லிருந்து 8,222 ஆக உயர்ந்துள்ளது. தலைநகர் சென்னையில் மேலும் 543 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

Tags:    

Similar News