உள்ளூர் செய்திகள்

மாயமான மாணவன் ராஜீவ்.

மாரண்டஅள்ளி அருகே அரசு காப்பகத்தில் பிளஸ்-2 மாணவன் மாயம்

Update: 2022-06-30 09:57 GMT
  • மாலையில் பள்ளி முடிந்து சிறுவர் காப்பகத்திற்கு திரும்பவில்லை.
  • போலீசார் மாணவனை தேடி வருகின்றனர்.

மாரண்ட அள்ளி, 

தருமபுரி மாவட்டம். மாரண்டஅள்ளி அருகே பஞ்சப் பள்ளி அரசு சிறுவர் இல்லத்தில் சேலம் மாவட்டம் எடப்பாடி வட்டம் நைனாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த தினகரன் மகன் ராஜுவ் (17) என்பவர் தங்கி பிளஸ்-2 படித்து வந்தார்.

இவர் நேற்று முன்தினம் வழக்கம் போல் பஞ்சப்பள்ளி அடுத்த பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளிக்குச் சென்றார். பின்னர் மாலையில் பள்ளி முடிந்து சிறுவர் இல்லத்திற்கு திரும்பவில்லை.

இது குறித்து சிறுவர் இல்ல கண்காணிப்பாளர் சுந்தரமூர்த்தி பஞ்சப்பள்ளி போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து போலீசார் மாணவனை தேடி வருகின்றனர்.

Similar News