உள்ளூர் செய்திகள்

தருமபுரி அருகே வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை

Update: 2022-06-30 09:58 GMT
  • பாபுவுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.
  • விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று குணமாகாததால் தூக்கில் தொங்கினார்.


தருமபுரி,

தருமபுரி அருகேயுள்ள வெள்ளாம்பட்டியை அடுத்த ஜெட்டி அல்லி பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மகன் பாபு(35).

இன்னும் திருமணம் ஆகவில்லை. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கும் முன்பு மாடி யிலிருந்து பாபு கீழே தவறி விழுந்துள்ளார். இதில் அவரது காலில் முறிவு ஏற்பட்டு படுகாயமடைந்து சிகிச்சை பெற்றுள்ளார்.

இதில் மனமுடைந்த நிலையில் இருந்து வந்த பாபு வீட்டில் யாருமில்லாத போது தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தருமபுரி நகர போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Similar News