உள்ளூர் செய்திகள்

கைதியை பார்க்க வந்தவரிடம் பணம் வசூல்: உயர் அதிகாரி எச்சரிக்கையால் வீட்டுக்கே சென்று திருப்பிக்கொடுத்த காவலர்

Published On 2022-06-28 09:34 GMT   |   Update On 2022-06-28 09:34 GMT
  • வசூல் செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சிறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
  • அதிர்ச்சி அடைந்த அந்த காவலர் பணம் வாங்கியவரின் வீட்டிற்கு தேடிச்சென்று பணத்தை ஒப்படைத்துள்ளார்.

தருமபுரி, 

சேலம் மத்திய சிறையின் கட்டுப்பாட்டில் சேலம், தருமபுரி ,கிருஷ்ணகிரி, நாமக்கல்லில் 15 மாவட்ட மற்றும் கிளை சிறையில் செயல்பட்டு வருகிறது சிறைகளில் தற்போதைய நிலவரப்படி 300 பேர் அடைக்கப்பட்டுள்ளனர்.

சிறைகளில் கைதிகளை பார்க்க வரும் உறவினர்களிடம் சிறை அதிகாரிகள் பணம் வசூலிப்பதாக தொடர்ந்து அதிகாரிகளுக்கு புகார் வந்தவனும் உள்ளது.

இவ்வாறு வசூல் செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சிறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த நிலையில் தருமபுரியைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டு தருமபுரி கிளைச்சேரியில் அடைக்கப்பட்டிருந்தார் . இவரை பார்க்க அவரது உறவினர் சிறைக்கு வந்துள்ளார்.

அவரிடம் அங்கிருந்து காவலர் ஒருவர் ஆயிரம் வசூலித்துள்ளார். இந்த விவகாரம் வெளியே கசிந்து உயர் அதிகாரிகளுக்கு தெரிய வந்தது.

இது குறித்து அதிகாரிகள் நடத்திய விசாரணையில் பணம் வசூலித்தது உறுதியானது. இதை அடுத்து யாரிடம் பணத்தை வாங்கினீர்களோ அவர்களிடமே பணத்தை திரும்ப கொடுக்க வேண்டும் இல்லை என்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த காவலர் பணம் வாங்கியவரின் வீட்டிற்கு தேடிச்சென்று பணத்தை ஒப்படைத்துள்ளார். இச்சம்பவம் சிறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Similar News