உள்ளூர் செய்திகள்

வெற்றி பெற்ற மாணவர்களுக்கு நோட்டு புத்தகம், எழுதுபொருட்கள் ஆகிய பரிசுகள் வழங்கியபோது எடுத்த படம்.

மாரண்டஅள்ளி அரசு பள்ளியில் தூய்மை திட்டத்திற்கான கட்டுரை போட்டி

Update: 2022-06-30 10:33 GMT
  • மாணவர்களுக்கு கட்டுரை போட்டி, ஓவியப் போட்டி மற்றும் பேச்சு போட்டிகள் நடத்தப்பட்டது.
  • வெற்றி பெற்ற மாணவர்களுக்கு நோட்டு புத்தகம், எழுதுபொருட்கள் ஆகிய பரிசுகளை பேரூராட்சி தலைவர் வெங்கடேசன் மாணவர்களுக்கு வழங்கி சிறப்புரையாற்றினார்.

தருமபுரி, 

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பேரூராட்சி சார்பில் தூய்மை பணி திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கு கட்டுரை போட்டி, ஓவியப் போட்டி மற்றும் பேச்சு போட்டிகள் நடத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு உதவி தலைமையாசிரியர் பழனிசாமி வரவேற்புரை யாற்றினார். பேரூராட்சி தலைவர் வெங்கடேசன் தலைமை வகித்தார்.

இதில் வீடு, பள்ளி, நகரத்தை எவ்வாறு தூய்மையாக வைத்துக் கொள்வது, குப்பைகளை கண்ட இடங்களில் போடாமல் குப்பை தொட்டிகளில் போடுதல், பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலும் தவிர்க்கவும், திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை மேம்படுத்தும் விதமாக மக்கும் குப்பை, மக்காத குப்பைகளை தரம் பிரித்து தருதல் உள்ளிட்டவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக மாணவர்களுக்கு நடைப்பெற்ற போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு நோட்டு புத்தகம், எழுதுபொருட்கள் ஆகிய பரிசுகளை பேரூராட்சி தலைவர் வெங்கடேசன் மாணவர்களுக்கு வழங்கி சிறப்புரையாற்றினார்.

இந்நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் சேகர் முன்னிலை வகித்தார். பேரூராட்சி செயல் அலுவலர் சித்திரை கனி, துப்புரவு மேற்பார்வையாளர் தேன்மொழி, ஆசிரியர்கள் மற்றும் பேரூராட்சி அலுவலர்கள் திரளாக கலந்து கொண்டனர். முடிவில் தழிழ் பட்டதாரி ஆசிரியர் மகேஷ் நன்றி தெரிவித்தார்.

Similar News