உள்ளூர் செய்திகள்

மேலவளவில் உள்ள நினைவிடத்தில் திருமாவளவன் எம்.பி. மரியாதை செலுத்திய காட்சி

7 பேர் நினைவிடத்தில் திருமாவளவன் மரியாதை

Update: 2022-06-30 10:22 GMT
  • மேலூர் அருகே மேலவளவில் கொலை செய்யப்பட்ட 7 பேர் நினைவிடத்தில் திருமாவளவன் மரியாதை செலுத்தினர்.
  • மாவட்ட ஒன்றிய நகர நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மேலூர்

மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ளது மேலவளவு. இங்கு ஊராட்சி மன்ற தலைவராக இருந்த முருகேசன் உட்பட 7 பேர் கடந்த 1997ம் ஆண்டு ஜூன் மாதம் 30-ம் நாள் படுகொலை செய்யப்பட்டனர்.

அதனை அடுத்து மேலவளவில் விடுதலை களம் அமைக்கப்பட்டு அங்கு முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் முருகேசனுக்கு சிலை மற்றும் அவருடன் படுகொலை செய்யப்பட்டவர்களின் படங்கள் வைக்கப்பட்டுள்ளன.

இன்று அவர்களுடைய 25-வது நினைவு தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் எம்.பி. நேரில் வந்து நினைவிடத்தில் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

இதில் மேலூர் தொகுதி செயலாளர் அய்யாவு, நிர்வாகி ஆற்றல் அரசு மதுரை கிழக்கு தொகுதி செயலாளர் கார்வண்ணன், வழக்கறிஞர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் மாதவன், மாவட்ட அமைப்பாளர் இ.எ.பாசறை, அரச. முத்துப்பாண்டியன், கிழக்கு ஒன்றிய துணைச் செயலாளர் மணிகண்டன் மற்றும் மாவட்ட ஒன்றிய நகர நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News