உள்ளூர் செய்திகள்

நெல்லை-ஈரோடு இடையே ரெயில்கள்

Published On 2022-06-27 08:22 GMT   |   Update On 2022-06-27 08:22 GMT
  • மதுரை, விருதுநகர், சாத்தூர் வழியாக நெல்லை-ஈரோடு இடையே ரெயில்கள் அடுத்த மாதம் இயக்கப்படுகிறது.
  • இந்த தகவலை மதுரை கோட்ட ரெயில்வே செய்தி தொடர்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.

மதுரை

நெல்லை-ஈரோடு இடையே முன்பதிவு இல்லாத பயணிகள் ரெயில் மீண்டும் இயக்கப்படுகிறது.

அதன்படி ஈரோட்டில் இருந்து வருகிற 11-ம் தேதி முதல் மதியம் 1.35 மணிக்கு புறப்படும் பயணிகள் ரெயில், இரவு 9.45 மணிக்கு நெல்லை செல்லும்.

மறுமார்க்கத்தில் நெல்லையில் இருந்து வருகிற 13-ம் தேதி முதல் காலை 6.15 மணிக்கு புறப்படும் பயணிகள் ரெயில், மதியம் 2.30 மணிக்கு ஈரோடு செல்லும்.

இந்த ரெயில்கள் கொடுமுடி, புகலூர், கரூர், வெள்ளியணை, எரியோடு, திண்டுக்கல், அம்பாத்துரை, கொடைக்கானல் ரோடு, சோழவந்தான், மதுரை, திருப்பரங்குன்றம், திருமங்கலம், கள்ளிக்குடி, விருதுநகர், துலுக்கப்பட்டி, சாத்தூர், கோவில்பட்டி, கடம்பூர், வாஞ்சி மணியாச்சி யில் நின்று செல்லும்.

அதேபோல மயிலாடு துறை-திண்டுக்கல் இடையே முன்பதிவு இல்லாத பயணிகள் ரெயில் வருகிற 11-ந்தேதி முதல் இயக்கப்படுகிறது.

அதன்படி மயிலாடுதுறையில் இருந்து காலை 11.25 மணிக்கு புறப்படும் பயணிகள் ரெயில், மாலை 4 மணிக்கு திண்டுக்கல் செல்லும். மறுமார்க்கத்தில் திண்டுக்கல்லில் இருந்து வருகிற 12-ம் தேதி முதல் காலை 11.30 மணிக்கு புறப்படும் பயணிகள் ரெயில், மாலை 4 மணிக்கு மயிலாடுதுறை செல்லும்.

இந்த ரெயில்கள் குத்தாலம், ஆடுதுறை, கும்பகோணம், பாபநாசம், தஞ்சாவூர், பூதலூர், திருவெறும்பூர், மஞ்சத்திடல், திருச்சி, மணப்பாறை, வையம்பட்டி ஆகிய நிலையங்களில் நின்று செல்லும்.

மேற்கண்ட தகவலை மதுரை கோட்ட ரெயில்வே செய்தி தொடர்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News