உள்ளூர் செய்திகள்

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ரெயில்வே ஊழியர்கள்.

ரெயில்வே ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

Update: 2022-06-28 09:36 GMT
  • பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ரெயில்வே ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
  • இதில் 20க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

மதுரை

மதுரை ரெயில்வே காலனியில் உள்ள ரெயில்வே மருத்துவமனை புற நோயாளிகள் பிரிவு பகுதியில் இன்று தக்சின் ரெயில்வே ஊழியர்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இணைச் செயலாளர் சங்கர நாராயணன் தலைமை தாங்கினார். நிர்வாகி சரவணன், கார்டுகள் சங்க நிர்வாகி கல்யாண சுந்தரம் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.

மதுரை ரெயில்வே மருத்துவமனையில் காலி யாக உள்ள மருத்துவர் பணியிடங்களை நிரப்ப வேண்டும். மதுரை கோட் டத்தில் உள்ள 9 ரெயில் நிலைய பகுதிகளில் வசிக்கும் ரெயில்வே ஊழியர்கள் தரமான மருத்துவ சிகிச்சை கிடைக்காமல் அவதிப்படுகின்றனர்.

எனவே மேற்கண்ட 9 ரெயில் நிலையங்களிலும் காலியாக உள்ள மருத்துவ பணியிடங்களை நிரப்ப வேண்டும். தூய்மை பணி செய்யும் ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.

ஆர்ப்பாட்டத்தில் 20க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News