உள்ளூர் செய்திகள்

கஞ்சி கலயம் சுமந்து பெண்கள் ஊர்வலம்

Published On 2022-08-15 09:35 GMT   |   Update On 2022-08-15 09:35 GMT
  • கஞ்சி கலயம் சுமந்து பெண்கள் ஊர்வலமாக சென்றனர்.
  • இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர்.

மேலூர்

மேலூர் நொண்டிக்கோவில்பட்டியில் உள்ள ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தின் சார்பில் ஆடிப்பூரத் திருவிழாவை முன்னிட்டு உலக மக்கள் நன்மைக்காகவும், மழை பெய்து விவசாயம் செழிக்கவும் 1008 கஞ்சி கலய ஊர்வலம் நடந்தது. மாவட்ட பொறுப்பாளர் பனிமலர், மேலூர் மன்ற நிர்வாகிகள் ஜோதிலட்சுமி, செல்லம்மாள் மற்றும் விழாக்குழுவினர் இதில் பங்கேற்றனர். கஞ்சி கலையங்களை சுமந்த பெண்கள் நொண்டிகோவில்பட்டி மன்றத்தில் இருந்து ஊர்வமாக புறப்பட்டு அழகர் கோவில் ரோடு, பெரிய கடை வீதி, செக்கடி பஜார், பஸ் நிலையம், சேனல் ரோடு வழியாக மீண்டும் ஆதிபராசக்தி மன்றத்தை அடைந்தது.

முன்னதாக 108 பெண்கள் முளைப்பாரி ஊர்வலமும் அக்னி சட்டி ஊர்வலமும் நடந்தது. அம்மனுக்கு அபிஷேக ஆராதனை, வழிபாடுகள் நடந்தன. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர்.

Tags:    

Similar News