உள்ளூர் செய்திகள்

நகை-பணம் திருட்டு

Update: 2022-06-30 10:08 GMT
  • ஜெய்ஹிந்துபுரத்தில் வியாபாரி, டிரைவர் வீடுகளில் நகை-பணம் திருட்டு நடந்துள்ளது.
  • ஜெய்ஹிந்த்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை

ஜெய்ஹிந்த்புரம், பாரதியார் ரோடு, நேதாஜி தெருவை சேர்ந்தவர் சுகன்யா (வயது 28). இவரது கணவர் சுகந்த், அதே பகுதியில் பர்னிச்சர் கடை நடத்தி வருகிறார்.

நேற்று காலை சுகன்யா வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றார். அப்போது மர்மநபர்கள் முன் கதவு பூட்டை உடைத்து, வீட்டுக்குள் புகுந்து, பீரோவில் இருந்த 3 பவுன் நகை, ரூ. 70 ஆயிரம் ஆகியவற்றை திருடிச்சென்று விட்டனர்.

ஜெய்ஹிந்த்புரம், நேதாஜி தெருவை சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 52), ஷேர் ஆட்டோ டிரைவர். நேற்று காலை இவர் வீட்டை பூட்டிவிட்டு சவாரிக்கு புறப்பட்டுச் சென்றார். அப்போது மர்ம நபர்கள் வீடு புகுந்து பீரோவில் இருந்த 5 பவுன் தங்க நகை மற்றும் ரூ. 22 ஆயிரத்தை திருடிச்சென்று விட்டனர்.

மேற்கண்ட இரு திருட்டு சம்பவங்கள் தொடர்பாக ஜெய்ஹிந்த்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News