உள்ளூர் செய்திகள்

கோவில் திருவிழாவில் தகராறு: 3 பேர் கைது

Published On 2022-08-15 08:51 GMT   |   Update On 2022-08-15 08:51 GMT
  • கோவில் திருவிழாவில் தகராறில் லோடுமேனை கொல்ல முயன்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
  • இன்ஸ்பெக்டர் பாலமுருகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

மதுரை

தல்லாகுளம், ராஜீவ் காந்தி நகரில் உள்ள காளியம்மன் கோவிலில் கடந்த 5-ந் தேதி முதல் திருவிழா நடந்து வருகிறது. சம்பவத்தன்று இரவு 3 பேர் கும்பல் கோவில் வாசலில் கட்டப்பட்டு இருந்த ட்யூப் லைட்டுகளை அடித்து உடைத்து தகராறு செய்தது. இதுகுறித்து கோவில் நிர்வாகி இளையராஜா மற்றும் முருகன், காசிநாதன், ஈஸ்வரன் ஆகியோர் தட்டி கேட்டனர். ஆத்திரம் அடைந்த 3 பேரும் அவர்களை அரிவாளால் வெட்ட பாய்ந்தனர்.

இதுகுறித்து இளையராஜா தல்லாகுளம் போலீசில் புகார் செய்தார். உதவி கமிஷனர் சுரேஷ்குமார் உத்தரவின்பேரில், இன்ஸ்பெக்டர் பாலமுருகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். கோவில் திருவிழாவில் தகராறு செய்த பி.பி குளம் நேதாஜி மெயின் ரோடு செல்லபாண்டி மகன் ஜோதிபாசு (19), முல்லை நகர் செல்வராஜ் மகன் கணேசன் (20), பி.பி.குளம் இந்திரா நகர், முனியாண்டி கோவில் தெரு வேல்முருகன் மகன் பொன்பாண்டி (21) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

Similar News