உள்ளூர் செய்திகள்

சேலத்தில் கடந்த ஒரு மாதத்தில் குட்கா விற்ற 60 கடைகளுக்கு சீல் வைப்பு

Published On 2022-08-18 10:25 GMT   |   Update On 2022-08-18 10:25 GMT
  • குட்கா, புகையிலை பொருட்களை விற்பனை செய்யும் கடைக்காரர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்து வருகின்றனர்.
  • கடந்த ஒரு மாதத்தில் குட்கா விற்ற 60-க்கும் மேற்பட்ட கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

சேலம்:

சேலம் மாநகரத்தில் குட்கா, புகையிலை பொருட்களை விற்பனை செய்யும் கடைக்காரர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்து வருகின்றனர். கைது செய்யப்படும் நபர்களின் கடைகளை பூட்டி சீல் வைக்கும் பணியையும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த ஒரு மாதத்தில் குட்கா விற்ற 60-க்கும் மேற்பட்ட கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. அந்த கடைகளின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் 30 கடைகளுக்கு சீல் வைக்க பட்டியல் தாயரிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த கடை களின் உரிமத்தை ரத்து செய்யவதற்கான நடவடிக்கையும் எடுக்கப்பட உள்ளது. கடந்த ஒரு ஆண்டில் தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை பொருட்களை விற்ற 234 கடைகளுக்கு ரூ.11.70 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், கர்நாடக மாநிலத்தில் இருந்து தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை பொருட்களை கடத்தி வந்து, பெட்டி கடைகளில் விற்பதாக புகார் எழுந்தது. அதன்பேரில் கடைகளில் சோதனை நடத்தப்படுகிறது. குற்றவாளிகளுக்கு ஆதரவாக போலீசார் செயல்பட்டால், அவர்கள் மீது பணி இடை நீக்கம் நடவடிக்கை பாயும். கடை உரிமையாளர் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும், என்றார்.

Tags:    

Similar News