உள்ளூர் செய்திகள்

மருத்துவ சீட் வாங்கி தருவதாக கூறி ரூ.4.70 லடசம் மோசடி செய்தவர் கைது

Update: 2022-06-25 07:09 GMT
  • மருத்துவ சீட் வாங்கி தருவதாக கூறி ரூ.4.70 லடசம் மோசடி செய்தவரை போலீசார் கைது செய்தனர்.
  • அறக்கட்டளை நடத்தி வருகிறார்

கரூர்:

கரூர் நரிக்கட்டியூரை சேர்ந்தவர் ராமசாமி. இவரது மகள் ரசிகா பிளஸ்2 முடித்துவிட்டு நீட் தேர்வும் எழுதியுள்ளார். இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் 31-ந் தேதி ராமசாமியின் கைப்பேசிக்கு மதுரையில் இருந்து ஒருவர் பேசியுள்ளார். அவர், ஹிசீட் எஜூகேசனல் டிரஸ்ட் என்ற பெயரில் அறக்கட்டனை நடத்தி வருவதாகவும், உங்கள் மகள் நீட் தேர்வு எழுதியுள்ளார். இருப்பினும் எங்களுக்கு தெரிந்த கல்வி நிறுவனங்கள் உள்ளன.

அதில் மிகவும் குறைந்த தொகையில் மருத்துவம் பயில சீட் வாங்கித் தருவதாக கூறியுள்ளார். மேலும் முன் தொகையாக ரூ.4.70 லட்சம் கொடுக்க வேண்டும் எனகூறியுள்ளார்.

இதனை நம்பி, ராமசாமி ரூ.4.70 லட்சம் அனுப்பினாராம். பணம் அனுப்பிய 2 நாட்களில் அந்த நபரை கைபேசியில் அழைத்த போது பதில் இல்லையாம். இதனால் ஏமாற்றம் அடைந்ததாக கருதிய ராமசாமி கரூர் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து, மதுரை சர்வேயர் காலனியில் அறக்கட்டளை நடத்தி வந்த ரகுநாதபாண்டியன் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News