உள்ளூர் செய்திகள்

லாட்டரி விற்ற 3 பேர் கைது

Update: 2022-12-07 10:18 GMT
  • கரூர் மாவட்டம் தோகமலையில் லாட்டரி விற்ற 3 பேர் கைது
  • வெள்ளை சீட்டில் எண்கள் எழுதி, பொதுமக்களிடம் லாட்டரி விற்பனை

கரூர்

தோகைமலை பஸ் நிறுத்தம் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்ய ப்படுவதாக தோகைமலை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் பஸ் ஸ்டாண்டு பகுதியில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, வெள்ளை சீட்டில் எண்கள் எழுதி, பொதுமக்களிடம் லாட்டரி விற்பனை செய்ததாக தோகைமலையை சேர்ந்த ஆறுமுகம், (வயது 59), அதே பகுதியை சேர்ந்த மோகன்ராஜ் (40), கூடலுார் ராக்கம்பட்டியை சேர்ந்த சுப்பிரமணி, (46), ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்து உள்ளனர்.

Tags:    

Similar News