உள்ளூர் செய்திகள்

மாணவ-மாணவிகள் பிளாஸ்டிக் விழிப்புணர்வை பொதுமக்களிடம் ஏற்படுத்த வேண்டும்

Published On 2022-06-25 10:30 GMT   |   Update On 2022-06-25 10:30 GMT

    நாகர்கோவில்:

    'எனது குப்பை எனது பொறுப்பு' என்ற தலைப்பில் பள்ளி மாணவ -மாணவிகளுக்கான பேச்சு, கவிதை போட்டி குமரி மாவட்டத்தில் நடந்தது.

    நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி என 3 பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் பேச்சுப் போட்டியில் நடுநிலைப்பள்ளிகளுக்கான பிரிவில் சூரங்குடி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி மோனிஷா, உயர்நிலை பள்ளிகளுக்கான பிரிவில் ஆளூர் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி சுகைனா பாத்திமா, மேல்நிலை பள்ளிகளுக்கான பிரிவில் கோட்டாறு கவிமணி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி நிவேதா ஆகியோர் முதல் பரிசுகளை பெற்றனர்.

    கவிதைப்போட்டியில் நடுநிலைப்பள்ளிகளுக்கான பிரிவில் நாகர்கோவில் எஸ்.எல்.பி. மகளிர்உயர்நிலை பள்ளி மாணவி பரத், உயர்நிலைப் பிரிவில் வல்லங்குமரன்விலை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி கரிஷ்மா பாக்கியம், மேல்நிலைக்கான பிரிவில் கோட்டாறு கவிமணி பள்ளி மாணவி ஆஷிகா பிரியதர்ஷினி ஆகியோர் முதல் பரிசு பெற்றனர்.

    மாணவ-மாணவிக ளுக்கான பரிசளிப்பு விழா நாகர்கோவில் மாநகராட்சி அலுவலகத்தில் இன்று நடந்தது. விழாவில் மாநக ராட்சி மேயர் மகேஷ் கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார். முதல் பரிசு பெற்ற மாணவ-மாணவி களுக்கு சைக்கிள் பரி சாக வழங்கப்பட்டது.

    விழாவில் மாநகராட்சி ஆணையர் ஆனந்தமோகன், பொறியாளர் பாலசுப்பிர மணியன், நகர் நல அதிகாரி விஜய்சந்திரன், மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதைத் தொடர்ந்து மேயர் மகேஷ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    நாகர்கோவில் மாநகர பகுதியில் பொதுமக்களிட மிருந்து மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து வாங்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் மத்தியில் இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக பள்ளி-கல்லூரிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் ஏற்படுத்த முயற்சி மேற்கொண்டு உள்ளோம்.

    நாகர்கோவில் மாநகரில் உள்ள அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி களில் வருகிற திங்க ட்கிழமை முதல் மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். மாணவ- மாணவிகள் நினைத்தால் எதை வேண்டுமானாலும் சாதிக்கலாம்.

    இதனால் தான் மாணவ-மாணவிகள் மூல மாக இந்த முயற்சியை மேற்கொண்டு உள்ளோம். மாணவ -மாணவிகளின் பெற்றோருக்கு மட்டுமின்றி பொதுமக்களுக்கும் இது தொடர்பான விழிப்பு ணர்வை ஏற்படுத்த வேண்டும்.

    பிளாஸ்டிக்கை ஒழிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. நாகர்கோவில் மாநகரில் மட்டும் இதுவரை 5 குடோன்கள் பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளது. பிளாஸ்டிக்கை ஒழிப்பதற்கு பொது மக்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு தர வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Tags:    

    Similar News