உள்ளூர் செய்திகள்

கன்னியாகுமரி அருகே உள்ள மருந்துவாழ்மலையில் ஜோதிலிங்கேஸ்வரருக்கு16 வகையான வாசனைத்திரவியங்களால் சிறப்பு அபிஷேகம்

Published On 2022-06-27 09:07 GMT   |   Update On 2022-06-27 09:07 GMT
  • பக்தர்களுக்கு 9 வகையான பிரசாதம் வழங்கப்பட்டது
  • மாலை 6 மணிக்கு அலங்கார தீபாராதனை நடந்தது

கன்னியாகுமரி :

கன்னியாகுமரி அருகே உள்ளகொட்டாரம் பொற்றையடிவை குண்டபதியில்1800அடி உயரமருந்துவாழ்மலை அமைந்து உள்ளது.

இந்த மலையில் ஜோதிலிங்கேஸ்வரர் உடனுறை ஸ்ரீபர்வ தவர்த்தினி அம்மன் திருக்கோவில் அமைந்து உள்ளது.இந்த கோவிலில் ஆனிமாத பிரதோஷம்நேற்று மாலை நடைபெற்றது.

இதை யொட்டி மாலை4-30மணிக்கு நந்தீஸ்வ ரருக்கும் மூலவரான ஜோதி லிங்கேஸ்வரருக்கும் சிறப்பு அபிஷேகம் நடந்தது.

அப்போது எண்ணெய், மஞ்சள் பொடி, மாப்பொடி, திருமஞ்சனப்பொடி, பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், நெய், நாட்டுசர்க்கரை, இளநீர், விபூதி, பன்னீர், சந்தனம், உள்பட 16 வகையான வாசனைத் திரவியங்களால் இந்த அபிஷேகம் நடத்தப்பட்டது.

இந்த அபிஷேகத்தை சிவாச்சாரியார் பிரபாகரன் அடிகளார் நடத்தினார். பின்னர் மாலை 6 மணிக்கு அலங்கார தீபாராதனை நடந்தது. இதில் சிவனடியார் பேராசிரியர் அசோகன் தலைமையில் பக்தர்களின் பஜனை நிகழ்ச்சி இடம் பெற்றிருந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசன ம்செய்தனர். பக்தர்களுக்கு சர்க்கரை பொங்கல், பால் பாயாசம், வெண்பொங்கல் கொண்டக்கடலை, எள்ளு, உளுந்து, பஞ்சாமிர்தம், சாம்பார்சா தம் ஆகிய 9 வகையான அருட் பிரசாதங்கள் வழங்கப்பட்டன.

Tags:    

Similar News