உள்ளூர் செய்திகள்

குமரியில் சாரல் மழை

Published On 2022-06-25 07:29 GMT   |   Update On 2022-06-25 07:29 GMT
  • சிற்றார்-1-ல் 20.6 மி.மீ. பதிவு
  • திற்பரப்பு அருவி பகுதியில் விட்டு விட்டு மழை

நாகர்கோவில்:

குமரி மாவட்டம் முழு வதும் கடந்த சில நாட்களாக சுட்டெரிக்கும் வெயில் அடித்து வந்தது.

நேற்று காலையில் வெயில் அடித்து வந்த நிலையில் மதியத்திற்கு பிறகு சீதோஷ்ண நிலையில் திடீர் மாற்றம் ஏற்பட்டது. மாலையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இரவும் விட்டுவிட்டு மழை பெய்தது. இன்று காலையிலும் மழை நீடித்தது.

நாகர்கோவிலில் இன்று அதிகாலையில் ஒரு மணி நேரத்துக்கு மேலாக சாரல் மழை பெய்து கொண்டே இருந்தது. கொட்டாரம், மயிலாடி, சுசீந்திரம், பூதப்பாண்டி, ஆணைக் கிடங்கு, அடையாமடை, முள்ளங்கினா விளை, தக்கலை, புத்தன் அணை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் மழை பெய்தது.

மலையோர பகுதியான பாலமோர் பகுதியிலும் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு அணை பகுதிகளிலும் கனமழை கொட்டி தீர்த்தது. சிற்றார்-1-ல் அதிகபட்சமாக 20.6 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. அணை பகுதியில் பெய்து வரும் மழையின் காரணமாக அணைகளுக்கு மிதமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் இன்று காலை 41.32 அடியாக இருந்தது. அணைக்கு 614 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. 871 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. ெபருஞ்சாணி அணை நீர்மட்டம் 60.20 அடியாக உள்ளது. அணைக்கு 179 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 160 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

திற்பரப்பு அருவி பகுதியில் விட்டு விட்டு மழை பெய்து வருவதால் அங்கு ரம்யமான சூழல் நிலவுகிறது.அருவியில் மிதமான அளவு தண்ணீர் கொட்டுகிறது. சனிக்கிழமை யான இன்று அருவியில் குளிப்பதற்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர். அவர்கள் அருவியில் ஆனந்தக் குளியலிட்டு மகிழ்ந்தனர்.

ேசறும் சகதியுமான சாலை

நாகர்கோவில் சவேரியார் ஆலயத்தில் இருந்து ஈத்தாமொழி சந்திப்பு வரை உள்ள சாலை பாதாளச் சாக்கடை திட்டத்திற்காக தோண்டப்பட்டு பைப்லைன் அமைக்கப்பட்ட பிறகு ஜல்லிகள் நிரப்பப்பட்டு தற்காலிகமாக சாலை அமைக்கப்பட்டு உள்ளது.

இந்த வழியாக தற்போது பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த சாலை குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. இன்று அதிகாலையில் பெய்த மழையின் காரணமாக இந்த சாலை சேறும் சகதியுமாக மாறி உள்ளது. சாலையில் உள்ள பள்ளங்களில் மழைநீர் தேங்கி உள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு ஆளாகி உள்ள னர்.

Tags:    

Similar News