உள்ளூர் செய்திகள்

குளச்சலில் நகரசபை கூட்டம் ஒத்தி வைப்பால் அத்தியாவசிய பணிகள் பாதிக்கப்படுகிறது - தலைவர் வேதனை

Published On 2022-06-28 06:22 GMT   |   Update On 2022-06-28 06:22 GMT
  • குளச்சல் நகர்மன்ற சாதாரணக்கூட்டம் தலைவர் நசீர் தலைமையில் நடந்தது
  • நகர வளர்ச்சிக்கு தி.மு.க. கவுன்சிலர்களே தடையாக இருக்கிறீர்கள்

கன்னியாகுமரி :

குளச்சல் நகர்மன்ற சாதாரணக்கூட்டம் தலைவர் நசீர் தலைமையில் நடந்தது.ஆணையர் (பொறுப்பு) ஜீவா, துணைத்தலைவர் ஷெர்லி பிளாரன்ஸ், சுகாதார ஆய்வாளர் தங்க பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் நடைப்பெற்ற விவாதங்களின் விபரம் வருமாறு,

ஜாண்சன் (தி.மு.க.) - அஜெண்டா 4 வது பொருள் ஒத்திவைக்கப்பட்டது.இப்போது மீண்டும் கொண்டு வரப்பட்டுள்ளது.

தலைவர் (தி.மு.க.) - நகராட்சிக்கு வழக்குரைஞர் அவசியம்.அதனால்தான் கொண்டு வரப்பட்டது.நகர வழக்குரைஞருக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

ஷீலா ஜெயந்தி (தி.மு.க.) - காலியாக உள்ள சுகாதார மேற்பார்வையாளர்கள் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும்.அதனால் நியமனக் குழு கூட்டத்தை கூட்ட வேண்டும்.

ரகீம் (தி.மு.க.) - நியமனக்குழு கூட்டத்தை நடத்திய பின் இந்த கூட்டத்தை நடத்தலாம்.

தலைவர் - காலி பணியிடம் 3 மாதத்திற்குள் நிரப்பப்படும். ஜாண்சன் - பணியாளர் களை நியமனம் செய்த பின் கூட்டம் நடத்தலாம்.

தலைவர் - அடுத்த மாதம் நியமனக்குழு கூட்டம் நடத்தலாம்.

ஆணையர் - 3 நாளில் நியமனக்குழு கூட்டம் போடலாம்.

ஜாண்சன், ரகீம் - நியமனக்குழு கூட்டம் முடிஞ்சு, இந்த கூட்டத்தை நடத்தலாம்.

தலைவர் - குடிநீர், சுகாதாரப்பணிகள் சம்பந்த மாக முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட வேண்டும்.கூட்டத்தை ஒத்தி வைத்தால் மேற்கூறிய அத்தியவசியப்பணிகள் பாதிக்கப்படும்.

ரகீம் - எங்கள் கோரிக்கையை நிறைவேற்றிய பின் கூட்டம் நடத்தலாம்.

ஆறுமுகராஜா (அ.தி.மு.க) - முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்படவில்லை என்றால் வளர்ச்சிப்பணிகள் நடைபெறாது.நகர வளர்ச்சிக்கு தி.மு.க. கவுன்சிலர்களே தடையாக இருக்கிறீர்கள்.

தலைவர் - சரி, கூட்டம் ஒத்தி வைக்கப்படுகிறது.

இவ்வாறு விவாதம் நடந்தது.இதையடுத்து அஜெண்டா வாசிக்கப்படாமல் கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.

கூட்டத்தில் கவுன்சிலர்கள் பேசிய போது எடுத்தப்படம்.

Tags:    

Similar News