உள்ளூர் செய்திகள்

தொழில் அதிபர் வீட்டில் பெட்ரோல் குண்டுவீச்சு

Published On 2022-09-27 07:34 GMT   |   Update On 2022-09-27 07:34 GMT
  • மேலும் 2 பேருக்கு தொடர்பு
  • கைதான வாலிபரிடம் விசாரணை

நாகர்கோவில்:

கோவை, மதுரை, சேலத்தில் பாரதிய ஜனதா பிரமுகர்கள் வீடுகளில் பெட்ரோல் குண்டு வீசப் பட்டது.

இதைத் தொடர்ந்து குமரி மாவட்டத்தில் பாரதிய ஜனதா ஆதரவா ளர் மண்டைக்காடு கருமன் கூடல் பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் கல்யாண சுந்தரம் (வயது 55) என்பவரது வீட்டில் கடந்த 24-ந்தேதி பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இதை யடுத்து மண்டைக்காடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

பெட்ரோல் குண்டு வீசி சென்றவர்களை பிடிக்க 10 தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராவின் காட்சிகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது அந்த பகுதி யில் உள்ள சி.சி.டி.வி. கேமராவில் மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு வாலிபர்கள் பெட்ரோல் குண்டு வீசுவது போன்ற காட்சி பதிவாகி இருந்தது. அந்த காட்சிகளை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

இந்த நிலையில் தொழில் அதிபர் கல்யாண சுந்தரம் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசியதாக குளச்சல் பகுதியைச் சேர்ந்த முஸ்ஸா மில் என்ற ஷமில் கான் (25) என்பவரை போலீசார் கைது செய்து உள்ளனர்.கைது செய்யப்பட்டவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்த வழக்கில் மேலும் இரண்டு பேருக்கு தொடர்பு இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.அவர்களை பிடிக்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.போலீசார் தேடுவது அறிந்த அவர்கள் தலைமறைவாகி விட்டனர்.

குமரி மாவட்டத்தில் இன்று 3-வது நாளாகவும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். கன்னியாகுமரி, நாகர்கோவில், தக்கலை, குளச்சல் சப்- டிவிசன்களுக்குட்பட்ட பகுதிகளில் போலீசார் இரவு நேரங்களில் இரண்டு ஷிப்டுகளாக ரோந்து சுற்றி வந்தனர். முக்கியமான சந்திப்புகள் சோதனை சாவடிகளில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

மாவட்டம் முழுவதும் வாகன சோதனையும் நடத் தப்பட்டு வருகிறது.மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் தலை மையில் பாதுகாப்பு பணி யில் 1200 போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

Tags:    

Similar News