உள்ளூர் செய்திகள்

திருவட்டார் ஆதிகேசவபெருமாள் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா

Update: 2022-08-18 08:32 GMT
  • தினமும் காலை, மாலை வேளைகளில் சாமி தரிசனம் செய்வதற்கு பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது.
  • விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் ஆதிகேசவ பக்தர்கள் சங்க டிரஸ்ட் உறுப்பினர்கள் செய்து வருகின்றனர்.

கன்னியாகுமரி :

108 வைணவ திருத்தலங்களில் ஒன்றான திருவட்டார் ஆதிகேசவபெருமாள் கோவில் மிகவும் பிரசித்த பெற்றதாகும். இந்த கோவிலில் கடந்த ஜூலை மாதம் 6-ந் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதை தொடர்ந்து தினமும் காலை, மாலை வேளைகளில் சாமி தரிசனம் செய்வதற்கு பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் இன்று மாலை கிருஷ்ண ஜெயந்தி விழா நடைபெறுகிறது. மாலை 4 மணிக்கு தொட்டில் அலங்காரம் அதைத் தொடர்ந்து பாகவதம் பூஜை, தீபாராதனை நடைபெறுகிறது. இரவு 12 மணிக்கு கலச பூஜை நடை பெறுகிறது. அதை தொடர்ந்து அலங்கார தீபாராதனை நடை பெறுகிறது.

விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் ஆதிகேசவ பக்தர்கள் சங்க டிரஸ்ட் உறுப்பினர்கள் செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News