உள்ளூர் செய்திகள்

விவேகானந்தர் மண்டபம்- திருவள்ளுவர் சிலை இடையே ரூ.37 கோடி செலவில் பாலம்அடுத்த ஆண்டுக்குள் அமைக்கப்படும் - தமிழக சட்டமன்ற பேரவை ஏடுகள் குழு தலைவர் பேட்டி

Published On 2022-08-18 10:19 GMT   |   Update On 2022-08-18 10:19 GMT
  • தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியால் திறந்து வைக்கப்பட்ட 133 அடி உயர திருவள்ளுவர் சிலை
  • ஆன்மீக அன்பர்களும், சுற்றுலா பயணிகளும், யாத்திரிகர்களும், பக்தர்களும் ஒரே நேரத்தில் விவேகானந்தர் நினைவு மண்டபத்தையும் திருவள்ளுவர் சிலையை சென்று பார்ப்பதற்கு வசதியாக இவை இரண்டுக்கும் இடையே ரூ.37 கோடி செலவில் இணைப்பு பாலம்

கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள 133 அடி உயர திருவள்ளுவர் சிலையில் பராமரிப்பு பணியை தமிழக சட்டமன்ற பேரவை ஏடுகள் குழு தலைவரும் கம்பம் சட்டமன்ற தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. வு மான ராமகிருஷ்ணன் தலைமையில் எம்.எல்.ஏ.க்கள் குழுவினர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பின்னர் சட்டமன்ற குழு தலைவர் ராமகிருஷ்ணன் எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர்கூறியதாவது:-

கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள பாறையில் 2000-ம் ஆண்டில் தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியால் திறந்து வைக்கப்பட்ட 133 அடி உயர திருவள்ளுவர் சிலை கடல் நடுவில் அமைந்துள்ளதால் கடல் உப்பு காற்றினால் சேதம் அடைவதை தடுக்க 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை திருவள்ளுவர் சிலையில் ரசாயன கலவை பூசப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.

அதன் அடிப்படையில் தற்போது திருவள்ளுவர் சிலையில் ரசாயன கலவை பூசும் பணி நடந்து வருகிறது. இந்த பணி இன்னும் 2 மாதங்களில் முடிவடையும்.

அதன்பிறகு ஆன்மீக அன்பர்களும், சுற்றுலா பயணிகளும், யாத்திரிகர்களும், பக்தர்களும் ஒரே நேரத்தில் விவேகானந்தர் நினைவு மண்டபத்தையும் திருவள்ளுவர் சிலையை சென்று பார்ப்பதற்கு வசதியாக இவை இரண்டுக்கும் இடையே ரூ.37 கோடி செலவில் இணைப்பு பாலம் அமைக்கப்படும் என்று சட்டமன்றத்தில் தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்து நிதியும் ஒதுக்கீடு செய்து உள்ளார். இந்த இணைப்பு பாலம் அடுத்த ஆண்டுக்குள் கட்டி முடிக்கப்படும் என்று நம்புகிறேன்.

இவ்வாறு அவர்கூறினார்.

Tags:    

Similar News