உள்ளூர் செய்திகள்

70 வயதானவர்களுக்கு 10 சதவீதம் ஓய்வூதியம் உயர்த்தி வழங்க வேண்டும்

Published On 2022-08-09 07:29 GMT   |   Update On 2022-08-09 07:29 GMT
  • மின் துறையை பொதுத்துறையாக நீடிக்க வேண்டும்
  • மின்வாரிய ஓய்வு பெற்றோர் மாநாட்டில் தீர்மானம்

கன்னியாகுமரி:

தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பு 21-வது மாவட்ட மாநாடு தக்கலை மேட்டுக் கடை பகுதியில் நடந்தது.

தலைவர் ஞான ஆசிர்வா தம் தலைமை தாங்கினார். இணைச்செயலாளர் அய்யப் பன்பிள்ளை, உதவித் தலைவர் சொக்கலிங்கம் மற்றும் முத்துசாமி ஆசாரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மகேஷ்வரன் கொடியேற்றினார். வர வேற்புகுழு செயலாளர் குமரேசன் வரவேற்றார். அஞ்சலி தீர்மானத்தை குமாரும் செயாலாளர் அறிக்கையை மாவட்ட செயலாளர் பிரான்சிஸ்-ம் பொருளாளர் அறிக்கையை பொருளாளர் குஞ்சன் பிள்ளையும் சமர்ப்பித்தனர்.

மாநில உதவித்தலைவர் ராஜமணி, விருதுநகர் மாவட்ட தலைவர் சந்தியா கப்பன், தூத்துக்குடி கிளை மாவட்ட செயலாளர் தங்கராஜ் மற்றும் ஐவின் செல்வதாஸ் ஆகியோர் பேசினர். மாநில பொதுச் செயலாளர் ஜெகதீசன் மாநாடு குறித்து விளக்கவுரை ஆற்றினார். கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. விவாதத்தை பாக்கியசந்திரா தொடங்கி வைத்தார். கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். தீர்மானங்களை 7 பேர் கொண்ட குழு முன் மொழிந்தது. அதன் விவரம் வருமாறு:-

தேர்தல் வாக்குறுதிப்படி பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த கூறியும், 1972 பணிக்கொடை சட்டப்படி நிலுவைத்தொகை வழங்கக் கேட்டும், குடும்ப பாதுகாப்பு நிதி ரூ.1 லட்சமாக உயர்த்தி டக் கேட்டும், மாற்றுத் திறனாளிகளின் பெயர்களை வாரிசுதாரர் களாக பதிவு செய்ய கேட்டும், மின்சார வாரிய வைரவிழா சலுகை 3 சதவீதம் உயர்வு வழங்கிட கேட்டும், தேர்தல் வாக்குறுதிப்படி 70 வயது நிரம்பியவர்களுக்கு 10 சதவீதம் ஓய்வூதியம் உயர்த்தி வழங்கிட கேட்டும், மின் துறையை பொதுத்துறையாக நீடிக்ககேட்பது உள்ளிட்ட 15 தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது. ராமச்சந்திரன் நன்றி கூறினார்.

Tags:    

Similar News