உள்ளூர் செய்திகள்

புதுக்கடையில் பள்ளிக்கூடம் அருகே கஞ்சா விற்ற 2 பேர் கைது

Published On 2022-08-09 07:22 GMT   |   Update On 2022-08-09 07:22 GMT
  • குமரி மாவட்டத்தில் மாணவர்களை குறி வைத்து போதை பொருட்கள் விற்பனை
  • போலீசார் ரகசியமாக கண் காணிப்பு

கன்னியாகுமரி:

குமரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி மாணவர் களை குறி வைத்து கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை செய்வதாக புகார் உள்ளது. இதையடுத்து மாவட்ட போலீஸ் கடும் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில் புதுக்கடை அருகே உள்ள முஞ்சிறை பகுதியில் உள்ள பள்ளிகளை குறி வைத்து கஞ்சா விற்கப்படுவதாக எழுந்த புகாரின் பேரில் புதுக்கடை சப்- இன்ஸ்பெக்டர் சேகர் தலைமையில் போலீசார் அந்த பகுதியில் ரகசியமாக கண் காணித்தனர்.

அப் போது முஞ்சிறை அரசு மேல்நிலைப் பள்ளி அருகில் சந்தேகப்படும் படியாக இரு சக்கர வாகனத்துடன் நின்ற ஒருவர் போலீசை கண்டதும் ஓட முயற்சி செய்துள்ளார். போலீசார் மடக்கி பிடித்து விசாரித்த போது அவரிடம் 30 கிராம் வீதம் இரண்டு பொட்டலங்களில் 60 கிராம் கஞ்சா இருப்பது தெரிய வந்தது. போலீசார் அதனை வாகனத்துடன் பறிமுதல் செய்து போலீஸ் நிலையம் கொண்டு சென்றனர்.

விசாரணையில் அந்த நபர் அதே பகுதியை சேர்ந்த இம்மானுவேல் ராஜ் மகன் லிவிங்க்ஸ்டன் புரோ (வயது 22) என தெரிய வந்தது.

இது போன்று நேற்று மீண்டும் அதே பகுதியில் நடத்திய சோதனையின் போது முஞ்சிறை அரசு பள்ளியின் முன்புறம் உள்ள பஸ் நிலையத்தின் பின் பகுதியில் இரு சக்கரவாகனத்தில் ஒருவர் கஞ்சா விற்பது கண்டு பிடிக்கப்பட்டது. அவரை பிடித்து விசாரித்த போது 20 கிராம் கஞ்சா பொட்டலம் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.

அவரை போலீஸ் நிலையம் அழைத்து சென்று நடத்திய விசாரணையில் அவர், முஞ்சிறை பகுதி முருகன் மகன் முபின் (25) என தெரிய வந்தது. சமமந்தப்பட்ட இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

Tags:    

Similar News