உள்ளூர் செய்திகள்

பக்தர்கள் தீர்த்தக்குடம் எடுத்து வந்த காட்சி.

கண்ணனூர் மாரியம்மன் ஆடித்திருவிழா பக்தர்கள் தீர்த்தக்குடம் எடுத்து வந்து வழிபாடு

Published On 2022-08-09 07:14 GMT   |   Update On 2022-08-09 07:14 GMT
  • தாரமங்கலம் கண்ணனூர் மாரியம்மன் கோவில் ஆடிபெருவிழா தொடங்கியது.
  • முதல்நாள் நிகழ்ச்சியாக பக்தர்கள் 1008 தீர்த்தக்குடம் எடுத்து முக்கிய வீதிகள் வழியாக வந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்தனர்.

தாரமங்கலம்:

தாரமங்கலம் கண்ணனூர் மாரியம்மன் கோவில் ஆடிபெருவிழா தொடங்கியது. முதல்நாள் நிகழ்ச்சியாக பக்தர்கள் 1008 தீர்த்தக்குடம் எடுத்து முக்கிய வீதிகள் வழியாக வந்து அம்மனுக்கு அபிஷே கம் செய்தனர். இரவு மின்விளக்குகளாலும் பூக்களாலும் அலங்கரிக்கப்பட்ட மகாமேருவில் சிம்மவாகனத்தில் அம்மன் திருவீதி உலா நடந்தது.

2-ம் நாள் நிகழ்ச்சி யாக இன்று மாலை ஸ்ரீ முத்துக்கு மாரசாமி படைக்கோலம் நடை பெற்றது. நாளை 3-ம் நாள் நிகழ்ச்சியாக அதிகாலை முதல் பக்தர்களின் பூ மிதித்தல், மாவிளக்கு ஊர்வலமும் மாலை அலங்கரிக்கப்பட்ட பூந்தேரில் அம்மன் திருவீதி உலா, அலகு குத்துதல் ஆகியவை நடக்கின்றன.

நாளை மறுநாள் (வியாழக்கிழமை) பூந்தேர் ஊர்வலமும் 12-ந்தேதி( வெள்ளிக்கிழமை) மாலை வெள்ளிக்குதிரை வாகனத்தில் அம்மன் திருமஞ்சள் நீராட்டு வீதிஉலா நடைபெறும்.

5 நாட்களும் கண்கவர் கலைநிகழ்ச்சிகளும், பட்டி மன்றம் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறும் . விழாவிற்கான ஏற்பாடுகளை கட்டளை தாரர்கள் பூவேல் நாட்டு நாட்டண்மைக்காரர் இனியன், நகராட்சி தலைவர் குப்பு என்கிற குணசேகரன், இந்துசமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ராஜா, செயல் அலுவலர் அசோக்குமார் மற்றும் ஊர் பொதுமக்களும் செய்து வருகின்றனர் .

Tags:    

Similar News