உள்ளூர் செய்திகள்
கண்டுணா்வு விழிப்புணா்வு சுற்றுலா-விவசாயிகளுக்கு அழைப்பு
- இயற்கை விவசாயம் பல்வேறு தரப்பினா் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது.
- நத்தக்காடையூரில் நாளை இயற்கை விவசாய சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வெள்ளகோவில் :
வெள்ளக்கோவில் வட்டார விவசாயிகளுக்கு வேளாண் துறை சாா்பில் கண்டுணா் விழிப்புணா்வு சுற்றுலாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தற்போது இயற்கை விவசாயம் பல்வேறு தரப்பினா் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது. இது குறித்து அறிந்து கொள்ளவும், பயன்கள், நேரடி அனுபவத்தை பெறும் வகையிலும் சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வட்டார வேளாண் துறை சாா்பில் வெள்ளக்கோவில் வட்டார விவசாயிகளுக்காக அருகில் உள்ள நத்தக்காடையூரில் நாளை இயற்கை விவசாய சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் கலந்து கொள்ள ஆா்வமுள்ள விவசாயிகள் வட்டார வேளாண் அலுவலகத்தைத் தொடா்பு கொள்ளுமாறு, வட்டார வேளாண் தொழில்நுட்ப மேலாளா் பூங்கொடி தெரிவித்துள்ளாா்.