தி.மு.க. வினர் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்த காட்சி.
கடத்தூரில் கலைஞர் பிறந்தநாள் கொண்டாட்டம்
- முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் 100-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
- இந்நிகழ்சிக்கு ஒன்றிய செயலாலர் சிவபிரகாசம் தலைமை தாங்கினார்.
கடத்தூர்,
தருமபுரி மாவட்டம், கடத்தூர் நகர தி.மு.க சார்பில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் 100-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்சிக்கு ஒன்றிய செயலாலர் சிவபிரகாசம் தலைமை தாங்கினார். நகர செயலாலர் மோகன் முன்னிலை வகித்தார். பேரூராட்சி தலைவர் மணி, துணை தலைவர் வினோத்,அவை தலைவர் ராஜா, கவுன்சிலர்கள் முனிராஜ், கார்த்திக். முன்னாள் பேரூராட்சி தலைவர்கள் செந்தில் குமார், மாரிமுத்து, மாவட்ட அமைப்பு சார ஒட்டுனர் சங்க அமைப்பாளர் வடிவேல், கேஸ்மதி, பச்சியப்பன், கார்த்திக், சென்னகிருஷ்ணன், தங்கராஜ், ஆதாம், சதீஸ்குமார், உள்ளிட்ட ஏராளமான கட்சியினர் கலந்து கொண்டு கேக் வெட்டி இனிப்புகள் வழங்கினர். இதனையடுத்து பொதுமக்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.