உள்ளூர் செய்திகள்

விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள பூக்களை படத்தில் காணலாம்.

குண்டு மல்லி விலை சரிவு

Published On 2022-08-10 10:14 GMT   |   Update On 2022-08-10 10:14 GMT
  • சாமந்தி 120 ரூபாய்க்கும், பட்டன் ரோஸ் 160-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
  • ஜாதி மல்லி 260 ரூபாய்க்கும் தருமபுரி பூ மார்க்கெட்டில் பூக்கள் விற்பனை செய்யப்பட்டது.

தருமபுரி,

தருமபுரி மாவட்டத்தில் விவசாயிகள் குண்டுமல்லி, சாமந்தி, சம்பங்கி, செண்டு மல்லி, முல்லை, காக்கனா, கோழிக்கொண்டை, மிராபல், பன்னீர் ரோஸ் உள்ளிட்ட அனைத்து வகை பூக்களையும் சாகுபடி செய்து வருகின்றனர்.

இங்கு சாகுபடி செய்யப்படும் பூக்கள் வெளி மாவட்டங்கள் மற்றும் அண்டை மாநிலங்கள், வெளிநாடுகள் என அனுப்பி வைக்கப்படுகிறது.

இந்த நிலையில் தொடர்ந்து கடந்த ஒரு மாதமாக பூக்களின் விலை கடும் சரிவில் இருந்து வந்தது. இதனால் விவசாயிகள் மாற்றுப்பயிர்களை பயிரிட தீவிரம் காட்டி வந்தனர்.

இந்த நிலையில் ஆடி மாதம் தொடங்கியதை அடுத்து பூக்களின் விலை படிப்படியாக உயர தொடங்கியது. முக்கிய பண்டிகைகளான ஆடிப்பெருக்கு மற்றும் வரலட்சுமி நோன்பு பண்டிகையை முன்னிட்டு தருமபுரி பூ மார்க்கெட்டில் குண்டுமல்லி கிலோ 1,200 ரூபாய்க்கு, விற்பனை செய்யப்பட்டது.

அதேபோல் முல்லை 700 ரூபாய்க்கும், விற்பனை செய்யப்பட்டது. குண்டு மல்லி அதிக வரத்தால் திடீரென விலை குறைந்து கிலோ 440 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல் முல்லைப்பூ 700 ரூபாயிலிருந்து 400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஆடி மாதம் என்பதால் தருமபுரி மாவட்டத்தில் அனைத்து கிராமங்களிலும் மாரியம்மன் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்று வருவதால் மற்ற பூக்களின் விலை அதிகரித்துள்ளது.

சாமந்தி 120 ரூபாய்க்கும், பட்டன் ரோஸ் 160-க்கும், சம்பங்கி 200 ரூபாய்க்கும், பன்னீர் ரோஸ் 120 ரூபாய்க்கும், மூக்குத்தி ரோஸ் 200 ரூபாய்க்கும், காக்கனாம்பு 360 ரூபாய்க்கும், ஜாதி மல்லி 260 ரூபாய்க்கும் தருமபுரி பூ மார்க்கெட்டில் பூக்கள் விற்பனை செய்யப்பட்டது.

Tags:    

Similar News