உள்ளூர் செய்திகள்

சென்னை கைதியை மோட்டார் சைக்கிளில் ஏற்றி சென்ற வார்டன் சஸ்பெண்டு

Published On 2022-06-28 06:11 GMT   |   Update On 2022-06-28 06:11 GMT
  • பரோலில் சென்ற ஹரீஷ் எங்கு சென்றார் என்பது குறித்து சிறை அதிகாரிகள் போலீசார் விசாரணை நடத்தினர்.
  • வார்டன் ராமகிருஷ்ணனிடம், சிறை கண்காணிப்பாளர் கிருஷ்ணகுமார் மற்றும் அதிகாரிகள் 2 நாட்களாக விசாரணை நடத்தினர்.

சேலம்:

சென்னை தண்டையார்பேட்டையை சேர்ந்தவர் ஹரீஷ் (வயது 44), கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். நன்னடத்தை அடிப்படையில் அவருக்கு கடந்த 22-ந் தேதி சிறை அதிகாரிகள் 3 நாள் பரோல் வழங்கினர்.

இதையடுத்து அவர் 25-ந் தேதி மாலை 6 மணிக்கு பரோல் முடிந்து சிறையில் ஆஜராகி இருக்க வேண்டும், ஆனால் மாலை 5.30 மணிக்கு சிறைக்கு போன் செய்து 10 நிமிடங்களில் ஆஜராகி விடுவதாக தெரிவித்த அவர் சிறைக்கு வரவில்லை.

இதனால் சிறை அதிகாரிகள் போலீசார் அவர் பேசிய மொபைல் எண்ணை தொடர்பு கொண்டு பேசியபோது காரில் அவரை சேலத்தில் விட்டு விட்டதாக அவரது டிரைவர் தெரிவித்தார்.

பரோலில் சென்ற ஹரீஷ் எங்கு சென்றார் என்பது குறித்து சிறை அதிகாரிகள் போலீசார் விசாரணை நடத்தினர். தொடர்ந்து சிறையில் நுழைவு வாயில் அருகே உள்ள சி.சி.டி.வி. கேமராவை ஆய்வு செய்ததில் நுழைவு வாயிலில் நின்ற ஹரீஷ் வார்டன் ராமகிருஷ்ணன் தனது மோட்டார் சைக்கிளில் ஏற்றி சென்றது தெரிய வந்தது.

இதையடுத்து வார்டன் ராமகிருஷ்ணனிடம், சிறை கண்காணிப்பாளர் கிருஷ்ணகுமார் மற்றும் அதிகாரிகள் 2 நாட்களாக விசாரணை நடத்தினர். இதையடுத்து ஹரீஷ் பழம் வாங்க வேண்டும் என தெரிவித்ததால் அவரை பழக்கடைக்கு அழைத்து சென்றதாக கூறினார்.

நேற்றிரவு ராமகிருஷ்ணனை சஸ்பெண்டு செய்து சிறை கண்காணிப்பாளர் கிருஷ்ணகுமார் உத்தரவிட்டார். மேலும் இதில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என்று விசாரணை நடத்தி வரும் போலீசார் தலைமறைவான கைதி ஹரீஷை தேடி வருகிறார்கள்.

Tags:    

Similar News