உள்ளூர் செய்திகள்

கைதான 2 வாலிபர்களை படத்தில் காணலாம்.

தொடர் வழிப்பறி, திருட்டில் ஈடுபட்ட 2 வாலிபர்கள் குண்டர் சட்டத்தில் கைது

Update: 2022-06-25 08:48 GMT
  • தருமபுரியில் தொடர் திருட்டில் ஈடுபட்ட 2 பேர் சிக்கினார்.
  • 2 பேரும் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டனர்.

தருமபுரி,

தருமபுரி மாவட்டம், அரூர் நகரப்பகுதியில் திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டதாக தேடப்பட்டு வந்த, திருச்சி மாவட்டம், மணப்பாறை பகுதியைச சேர்ந்த மணி என்பவருடைய மகன் யுவராஜ் (24), அரியமங்கலத்தை சேர்ந்த கணேசன் என்பவருடைய மகன் விக்னேஷ் (எ) விக்கி (20), அரூரை அடுத்த கோணம்பட்டி பகுதியை சேர்ந்த மாரி என்வருடைய மகன் ராமகிருஷ்ணன் (28) ஆகிய 3 பேரும் கடந்த மே மாதம் 15-ந் தேதி அனுமந்தீர்த்தம் அருகே கையும் கலவுமாக பிடிக்கப்பட்டனர்.

அப்போது இவர்களிடம் இருந்து 2 இருசக்கர வாகனங்கள், அரைக்கிலோ வெள்ளிப் பொருள்கள், அரிவாள், இரும்பு ராடு உள்ளிட்ட ஆயுதங்களை பறிமுதல் செய்த பின்பு சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில் யுவராஜ், விக்னேஷ் (எ) விக்கி ஆகிய இருவர் மீதும் தமிழகத்தில் பல்வேறு காவல் நிலையங்களில் திருட்டு, வழிப்பறி சம்பவம் தொடர்பான வழக்குகள் உள்ளதால் இருவரையும் குண்டர் சட்டத்தில் வழக்கு பதிவு செய்து கைது செய்து உள்ளனர்.

Similar News