உள்ளூர் செய்திகள்

தருமபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தின பேரணியை கலெக்டர் சாந்தி கொடி அசைத்து ெதாடங்கி வைத்தார்.

சர்வதேச போதை ஒழிப்பு தின விழிப்புணர்வு பேரணி

Update: 2022-06-27 08:14 GMT
  • பேரணியை கலெக்டர் சாந்தி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
  • போதை எதிர்ப்பு வாசகங்களை வலியுறுத்தும் பதாகைகளை ஏந்தி கோஷங்கள் எழுப்பி சென்றனர்.

தருமபுரி,

தருமபுரி மாவட்ட மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை சார்பில் சர்வதேச போதை ஒழிப்பு தின விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது.

கலெக்டர் அலுவலகத்திலிருந்து தொடங்கிய இந்த பேரணியை கலெக்டர் சாந்தி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

கலால் உதவி ஆணையர் தணிகாசலம், தருமபுரி வட்டாட்சியர் ராஜராஜன், கலால் டி.எஸ்.பி.சோமசுந்தரம் உள்பட பலர் முன்னிலை வகித்தனர்.

இந்த பேரணியில் கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு போதை எதிர்ப்பு வாசகங்களை வலியுறுத்தும் பதாகைகளை ஏந்தி கோஷங்கள் எழுப்பி சென்றனர்.

Similar News