உள்ளூர் செய்திகள்

கோவிலூர் ஏரிக்குள் நாட்டுத்துப்பாக்கியை வீசி சென்றது யார்?

Update: 2022-06-30 09:56 GMT
  • ஏரியில் ஆடு மாடு மேய்ச்சலுக்கு சென்ற நபர்கள் புதருக்குள் நாட்டு துப்பாக்கி இருப்பதை கண்டவுடன் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
  • துப்பாக்கியை வீசி சென்ற மர்ம நபர்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தருமபுரி,

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அடுத்த கோவிலூர் ஏரி உள்ளது.

இந்த ஏரியில் கோடைக்கு முன்னரே தண்ணீரின்றி வரண்டு முட்புதர்கள் முளைத்து காணப்படுகிறது.

ஏரியில் ஆடு மாடு மேய்ச்சலுக்கு சென்ற நபர்கள் புதருக்குள் நாட்டு துப்பாக்கி இருப்பதை கண்டவுடன் போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர்.

இதனை அடுத்து அதியமான் கோட்டை போலீசார் விரைந்து சென்று புதருக்குள் இருந்த நாட்டு துப்பாக்கியை கைப்பற்றினர். பின்னர் புதருக்குள் நாட்டுத் துப்பாக்கியை வீசி சென்ற மர்ம நபர்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Similar News