உள்ளூர் செய்திகள்

விழுப்புரத்தில் மாவட்ட கலெக்டர் மோகன் தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார்.

விழுப்புரத்தில் சுதந்திர தின விழா 198 பேருக்கு ரூ.1.69 கோடி நலத்திட்ட உதவிகள் கலெக்டர் மோகன் வழங்கினார்

Update: 2022-08-15 08:54 GMT
விழுப்புரத்தில் சுதந்திர தின விழா 198 பேருக்கு ரூ.1.69 கோடி நலத்திட்ட உதவிகள் கலெக்டர் மோகன் வழங்கினார்

விழுப்புரம்:

விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள காவல்துறை அணிவகுப்பு மைதானத்தில், இன்று சுதந்திர தின விழா நடைபெற்றது.இதையொட்டி, விழா மைதானத்திற்கு காலை 9 மணிக்கு கலெக்டர் மோகன் வருகை தந்தார். அவரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா வரவேற்றார். சரியாக 9.05 மணிக்கு கலெக்டர் மோகன் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

அதை தொடர்ந்து, ஆட்சியர் மோகன் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதாவுடன் திறந்த ஜீப்பில் சென்று காவல்துறையினர், வனத்து றையினர், ஊர்க் காவல் படையினர் ஆகியோரின் அணிவகுப்பு மரியா தையை ஏற்றுக்கொண்டார்.இதனை தொடர்ந்து, பல்வேறு துறைகளின் சார்பில் 198 பயனாளிகளுக்கு ஒரு கோடியே 66 லட்சத்து 85 ஆயிரத்து 465 ரூபாய் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். சுதந்திர தின விழாவை முன்னிட்டு, பள்ளி மாணவ, மாணவிகளின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

மாவட்ட அளவில் அரசின் பல்வேறு துறைகளில் சிறந்த முறையில் பணியாற்றியவர்களுக்கு நற்சான்றிதழ் வழங்கப்பட்டது. விழாவில், ரவிக்குமார்எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் லட்சுமணன், புகழேந்தி, சிவக்குமார், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ஜெயசந்திரன், விழுப்புரம் நகர் மன்ற தலைவர் தமிழ்ச்செல்வி, மாவட்ட வருவாய் அலுவலர் பரமேஸ்வரி, வருவாய் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News