உள்ளூர் செய்திகள்

காரிமங்கலம் சுற்றுவட்டார பகுதியில் வீட்டில் தனியாக இருக்கும் பெண்கள், முதியவர்களை குறிவைக்கும் கும்பல்

Update: 2022-06-25 08:46 GMT
  • தருமபுரி அருகே வீட்டில் தனியாக உள்ள பெண்களை கொள்ளையர்கள் குறிவைக்கின்றனர்.
  • போலீசார் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர்.

காரிமங்கலம்,

காரிமங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வீட்டில் தனியாக இருக்கும் பெண்கள் மற்றும் முதியோர்கள் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டுமென போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.

இதுகுறித்து காரிமங்கலம் இன்ஸ்பெக்டர் வெங்கட்ராமன் மற்றும் போலீசார் பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டனர்.

காதிமங்கலம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வீட்டில் தனியாக இருக்கும் முதியோர்கள் மற்றும் பெண்களிடம் முன்பின் அறிமுகம் இல்லாத நபர்கள் மற்றும் பெண்கள் உறவினர் மற்றும் நண்பர் போல் நடித்து அவர்களை திசை திருப்பி ஏமாற்றி வீட்டில் இருக்கும் விலை உயர்ந்த தங்க நகைகளை திருடிச் செல்வது தற்போது நடந்து வருகிறது.

குறிப்பாக வீட்டில் தனியாக இருக்கும் முதியோர்கள் மற்றும் பெண்களை குறிவைத்து தற்போது இதுபோன்ற சம்பவங்கள் நடந்து வருகிறது. எனவே வீட்டில் இருக்கும் பெண்கள் மற்றும் முதியோர்கள் எச்சரிக்கையுடன் செயல்பட்டு முன்பின் அறிமுகமில்லாத நபர்களை வீட்டிற்குள் அனுமதிக்க கூடாது.

மேலும் இதுபோன்ற சம்பவங்களை தடுத்து நிறுத்த பொதுமக்கள் தங்களது பங்களிப்புடன் தெருக்கள் மற்றும் வீதி நுழைவாயிலில் கண்காணிப்பு கேமரா பொருத்தி இதுபோன்ற சம்பவங்களை தடுத்து நிறுத்திட வேண்டும். மேலும் அறிமுகமில்லாத நபர்கள் நடமாட்டம் இருந்தால் போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என விழிப்புணர்வு பிரச்சாரம் மூலம் கேட்டுக்கொள்ளப்பட்டது.

Similar News