உள்ளூர் செய்திகள்

போலீஸ் துணை சூப்பிரண்டு சிந்து பேசியபோது எடுத்த படம்.

பாலக்கோடு உட்கோட்டத்தில் போலீசார் அனுமதித்த இடத்தில் மட்டுமே விநாயகர் சிலை வைக்க வேண்டும்- ஆலோசனை கூட்டத்தில் அறிவுறுத்தல்

Published On 2022-08-18 09:48 GMT   |   Update On 2022-08-18 09:48 GMT
  • சிலை வைக்கும் இடத்தில் எவ்வித கட்சி சார்ந்த பிளக்ஸ் போர்டு அதன் சார்ந்த தலைவர் தொடர்பான பேனர்கள் இருக்கக் கூடாது.
  • சிலை எடுத்து செல்லும் போது மினி லாரி, டிராக்டர் போன்ற நான்கு சக்கர வாகனங்களை பயன்படுத்த வேண்டும்.

பாலக்கோடு,

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு உட்கோட்டத்திற்கு உட்பட்ட பாலக்கோடு, மாரண்ட அள்ளி, பஞ்சப்பள்ளி, மகேந்திரமங்கலம், காரிமங்கலம் உள்ளிட்ட போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் வரும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிலை வைத்து கரைப்பது குறித்து போலீஸ் துணை சூப்பிரண்டு சிந்து தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இக்கோட்டத்தில் 31 ஆம் தேதி முதல் 4 ஆம் தேதி வரை என 5 நாட்கள் மட்டுமே சிலை வைக்க அனுமதி, சிலை வைப்பதற்கு கோட்டாட்சியர் அனுமதி பெற வேண்டும்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் கூறியிருப்பதாவது:-

விநாயகர் சிலை வைக்கும் இடமானது பொதுமக்களுக்கு போக்குவரத்துக்கு எவ்வகை இடையூறும் இருக்கக் கூடாது. விநாயகர் சிலை 10 அடிக்கு மிகாமல் இருக்கக் கூடாது. விநாயகர் சிலைகள் மண் மற்றும் இயற்கை விளைந்த மாவு பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்பட்டு இருக்க வேண்டும். காவல்துறை அனுமதி பெற்று காவல்துறை அனுமதித்த இடத்தில் மட்டுமே விநாயகர் சிலை வைக்க வேண்டும்.

அரசு உத்தரவுபடி தகர கூரை அமைக்க வேண்டும். சிலை வைக்கும் இடத்தில் எவ்வித கட்சி சார்ந்த பிளக்ஸ் போர்டு அதன் சார்ந்த தலைவர் தொடர்பான பேனர்கள் இருக்கக் கூடாது. சிலை எடுத்து செல்லும் போது மினி லாரி, டிராக்டர் போன்ற நான்கு சக்கர வாகனங்களை பயன்படுத்த வேண்டும்.

எக்காரணத்தை கொண்டும் இதர வாகனங்களை பயன்படுத்தக் கூடாது என உள்ளிட்டவை குறித்து பொதுமக்களுக்கு கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜாபர் உசேன், வெங்கட்ராமன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News