உள்ளூர் செய்திகள்

மொரப்பூரில் குப்பைக்கு தீ வைத்த போது மூதாட்டி கருகி சாவு

Update: 2022-10-06 09:53 GMT
  • வீட்டின் அருகில் குப்பைக்கு தீ வைத்தார்.
  • தீ உடையில் பிடித்து கருகி உயிரிழந்தார்.

தருமபுரி,

தருமபுரி மாவட்டம், மொரப்பூர் அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் சின்னகன்னி (வயது80). இவர் நேற்று வீட்டின் அருகில் குப்பை கழிவுகளை ஒதுக்கி தீ வைத்து எரித்து கொண்டு இருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக சின்னகன்னி மீது தீ பற்றியது. இதனால் அவர் அலறினார். உடனே அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர்.

இதில் படுகாயம் அடைந்த மூதாட்டியை மீட்டு சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்றிரவு சின்னகன்னி பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து மொரப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News