உள்ளூர் செய்திகள்

தருமபுரியில் இருசக்கர வாகனம் திருடிய வாலிபர் கைது

Update: 2022-10-06 09:54 GMT
  • அடுத்த நாள் 8-ம் தேதி காலை வாகனத்தை வந்து பார்த்தபோது வாகனம் திருடு போயிருந்தது தெரியவந்தது.
  • சிசிடிவி கேமராவில் பதிவான காட்சியை ஆய்வு செய்து பைக் திருடியவர் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த சின்னதுரை மகன் பாபு (29) என்பவர் வாகனத்தை திருடி சென்றது தெரிய வந்தது.

தருமபுரி,

தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அடுத்த பாகல அள்ளி பகுதியைச் சேர்ந்தவர் முருகன் (வயது34). இவர் காடையாம்பட்டி தீயணைப்பு நிலையத்தில் இரண்டாம் காவலராக பணி செய்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் 7-ம் தேதி நகராட்சி பூங்கா அருகே உள்ள மருத்துவமனையின் கீழ் இருசக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு சிகிச்சை பெற்று வரும் தன் மனைவியை கவனித்துக் கொள்வதற்காக மருத்துவமனையில் தங்கி உள்ளார்.

அடுத்த நாள் 8-ம் தேதி காலை வாகனத்தை வந்து பார்த்தபோது வாகனம் திருடு போயிருந்தது தெரியவந்தது.

இது குறித்து முருகன் தருமபுரி நகர போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சிசிடிவி கேமராவில் பதிவான காட்சியை ஆய்வு செய்து பைக் திருடியவர் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த சின்னதுரை மகன் பாபு (29) என்பவர் வாகனத்தை திருடி சென்றது தெரிய வந்தது. இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்து நேற்று சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News