உள்ளூர் செய்திகள்

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தருமபுரி மாவட்ட தொழிற்சங்க அரங்க இடைக்கமிட்டி மாநாடு நடைபெற்றது.

தருமபுரி மாவட்டத்தில் சிப்காட் தொழிற்பேட்டையை தொடங்க இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி அரங்க மாநாட்டில் தீர்மானம்

Published On 2022-06-26 08:44 GMT   |   Update On 2022-06-26 08:44 GMT
  • தருமபுரியில் கம்யூனிஸ்ட் அரங்க மாநாடு நடந்தது.
  • மாநாட்டில் சிப்காட் தொழில் பேட்டை அமைக்க வலியுறுத்தினர்.

தருமபுரி,

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தருமபுரி மாவட்ட தொழிற்சங்க அரங்க இடைக்கமிட்டி மாநாடு நடைபெற்றது.மாநாட்டிற்கு நிர்வாகிகள்முனியன், அண்ணாதுரை தலைமை வகித்தனர்.

மாநாட்டில் ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்ட துணை தலைவர்சுதர்சனன் கட்சி கொடி ஏற்றினார்.போக்குவரத்து மண்டல தலைவர் ரவி அஞ்சலி தீர்மானம் வாசித்தார்.தொழிற்சங்க அரங்க இடைக்கமிட்டி செயலாளர் மணி வேலை அறிக்கை வைத்து பேசினார்.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர்தேவராசன் மாநாட்டை துவக்கி வைத்து பேசினார்.மாநில செயற்குழு உறுப்பினர் நஞ்சப்பன் சிறப்புரையாற்றினார்.

மாவட்ட துணை செயலாளர் கா.சி.தமிழ்க்குமரன், மாவட்ட பொருளாளர் மாதேஸ்வரன்,மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் கலைச்செல்வன் மாநாட்டில் வாழ்த்தி பேசினார்கள்.

மாநாட்டில் இந்திய ராணுவத்தில் குறுகிய கால ஒப்பந்த பணிமுறை நியமனமான அக்னிபாத் திட்டத்தை ஒன்றிய அரசு ரத்து செய்ய வேண்டும்.பொதுத்துறை நிறுவனமான எல்ஐசி, ரயில்வே, பிஎஸ்என்எல் நிறுவனங்களை தனியார் மயமாக்குவதை நிறுத்த வேண்டும்.தொழிலாளர்களின் 44 சட்டத் தொகுப்பை 4 சட்டங்களாக சுருக்குவதை ஒன்றிய அரசு கைவிட வேண்டும்.

தருமபுரி மாவட்டத்தில் சிப்காட் தொழிற்பேட்டையை தொடங்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.ஒகேனக்கல் குடிநீர் சீராக கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.தொப்பூர் சாலையில் அடிக்கடி நடக்கும் விபத்துகளை தடுக்க உயர்மட்ட மேம்பால சாலையை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதியமான்கோட்டை ரயில்வே மேம்பால சாலைப் பணியை முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.அனைத்து பகுதிகளுக்கும் தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும்.

விவசாய நிலங்களில் எரிவாயு குழாய் பதிப்பதை கைவிட்டு நெடுஞ்சாலை ஓரங்களில் குழாய் பதிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாநாட்டில் செயலாளர் மேணி,துணைச் செயலாளர் நாகராஜ், பொருளாளராக அண்ணாதுரை ஆகியோர் புதிய நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டனர்.

Similar News