உள்ளூர் செய்திகள்

வீடு புகுந்து பெண்ணிடம் சங்கிலி பறிப்பு: பொதுமக்களால் தாக்கப்பட்ட திருடர்களுக்கு தீவிர சிகிச்சை

Update: 2022-08-18 11:45 GMT
  • கூலிவேலைக்கு சென்ற நிலையில், தமிழரசி வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தார்.
  • 2 பேர், வீட்டுக்குள் புகுந்து, தமிழரசி கழுத்தில் அணிந்திருந்த தங்க சங்கிலியை பறித்தனர்.

சேலம்:

சேலம் உடையாப்பட்டி கந்தாஸ்ரமத்ைத சேர்ந்தவர் தமிழரசி (வயது 40). இவரது கணவர் சாமிநாதன் நேற்று முன்தினம் கூலிவேலைக்கு சென்ற நிலையில், தமிழரசி வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தார்.

அப்போது திருடர்கள் 2 பேர், வீட்டுக்குள் புகுந்து, தமிழரசி கழுத்தில் அணிந்திருந்த தங்க சங்கிலியை பறித்தனர். இதனால் தமிழரசி, கூச்சலிட்டார். சத்தம் கேட்டு மக்கள் அங்கு திரண்டு வந்து திருடர்கள் 2 பேரையும் சுற்றி வளைத்து பிடித்து தர்ம அடி கொடுத்தனர். பின்னர் அம்மாப்பேட்டை போலீஸ் நிலையத்தில் அவர்களை ஒப்படைத்தனர்.

விசாரணையில், அவர்கள் திருச்சி மாவட்டம் அரியமங்கலம், காமராஜர் நகரை சேர்ந்த அப்பு (வயது 32), பொன்மலையை சேர்ந்த லட்சுமணன் (35) என்பதும், தமிழகத்தில் பல்வேறு போலீஸ் நிலையங்களில் 30-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பதும், பிரபல திருடர்களான இவர்கள் சேலத்தில் கைவரிசை காட்ட வலம் வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து 2 பேரையும் கைது செய்த போலீசார், அப்பு, லட்சுமணன் காயம் அடைந்திருந்ததால் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு 2 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags:    

Similar News