உள்ளூர் செய்திகள்

திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ. கல்லூரியில் நடந்த உயர் கல்வி நிறுவனங்களுக்கான தொழில்நுட்ப விழாவில் கலந்து கொண்டவர்கள்.

திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ. கல்லூரியில் உயர் கல்வி நிறுவனங்களுக்கான சந்திப்பு கூட்டம்

Published On 2022-08-09 06:35 GMT   |   Update On 2022-08-09 06:35 GMT
  • தெற்கு ஒன்றிய உயர் கல்வி நிறுவனங்களுக்கான சந்திப்பு கூட்டம் பி.எஸ்.என்.ஏ. பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது.
  • 15க்கும் மேற்பட்ட கல்வியாளர்கள் பல்வேறு தலைப்புகளில் உரையாற்றினர்.

திண்டுக்கல்:

மத்திய கல்வி அமைச்ச கத்தின் இன்னோவேஷன் மற்றும் அனைத்திந்திய தொழில்நுட்ப கல்வி குழுமம் இணைந்து உயர் கல்வி நிறுவனங்களுக்கான 10வது பிராந்திய சந்திப்பு கூட்டங்களை நாடு முழு வதும் நடத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக தெற்கு ஒன்றிய உயர் கல்வி நிறுவனங்களுக்கான சந்திப்பு கூட்டம் பி.எஸ்.என்.ஏ. பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது. 500க்கும் மேற்பட்ட கல்வி யாளர்கள் மற்றும் மாணவ கண்டுபிடிப்பாளர்கள், 118 உயர் கல்வி நிறுவனங்களில் இருந்து பங்கேற்றனர்.

20-க்கும் மேற்பட்ட கண்டுபிடிப்புகளுக்கான அரங்கங்கள் அமைக்க ப்பட்டிருந்தன. 150-க்கும் மேற்பட்ட போஸ்டர்கள் கண்டுபிடிப்புகளை விளக்கும் வகையில் நிறுவப்பட்டிருந்தன.

ஏ.ஐ.சி.டி.இ. ஆலோசகர் மம்தாராணி அகர்வால் தலைமை தாங்கி சிறப்பித்தார். தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழி ல்நுட்ப கவுன்சிலின் செய லாளர் டாக்டர் சீனிவாசன் ெதாடக்க உரையாற்றினார். மத்திய கல்வி அமைச்சகம் மற்றும் ஏ.ஐ.சி.டி.இ. உதவி டைரக்டர் தீபன்கு மார்சாஹு சிறப்புரை யாற்றினார். 15க்கும் மேற்பட்ட கல்வி யாள ர்கள் பல்வேறு தலைப்புகளில் உரையாற்றினர். முடிவில் சிறந்த கண்டுபிடிப்பு க்கான அரங்க ங்கள் மற்றும் போஸ்டர்கள் தேர்ந்தெடுக்க ப்பட்டு கவுர விக்க ப்பட்டது.

கல்லூரி சேர்மன் தன லட்சுமிய ம்மாள், புரோ சேர்மன் ரகு ராமன், முத ல்வர் வாசு தேவன் பங்கே ற்ற அனை வரு க்கும் வாழ்த்து க்களை தெரிவித்தனர்.

Tags:    

Similar News