உள்ளூர் செய்திகள்

குற்றாலத்தில் கஞ்சா விற்ற மூதாட்டி-பேத்தி கைது

Update: 2022-06-28 06:16 GMT
  • பார்வதி வீட்டிலும், அவரது பேத்தி ராமலெட்சுமி வீட்டிலும் கஞ்சா பதுக்கி வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
  • 2 கிலோ கஞ்சா, கஞ்சா விற்ற பணம் ரூ.26,800 மற்றும் 2 செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

தென்காசி:

தென்காசியை அடுத்த ஆயிரப்பேரி காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பழனி. இவரது மனைவி பார்வதி(வயது 72).

இவர் மீது 15-க்கும் மேற்பட்ட கஞ்சா உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. மேலும் குற்றாலம் போலீசில் குற்ற பதிவேட்டிலும் இவரது பெயர் உள்ளது.

கடந்த சில நாட்களாக இவர் தனது வீட்டில் கஞ்சாவை பதுக்கி வைத்து பள்ளி, கல்லூரி மாணவர்கள் உள்பட அனைத்து வயதினருக்கும் சப்ளை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில் குற்றாலம் குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் அலெக்ஸ் ராஜ் தலைமையிலான போலீசார் அங்கு சென்று சோதனை செய்தனர். அப்போது பார்வதி வீட்டிலும், அவரது பேத்தி ராமலெட்சுமி வீட்டிலும் கஞ்சா பதுக்கி வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து போலீசார் 2 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2 கிலோ கஞ்சா, கஞ்சா விற்ற பணம் ரூ.26,800 மற்றும் 2 செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News