உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்

தேனி மாவட்டத்தில் கஞ்சா விற்ற கும்பல் கைது

Update: 2022-10-07 05:42 GMT
  • போடேந்திரபுரம் மயான அணைமேட்டு பகுதியில் வீரபாண்டி போலீசார்ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
  • போலீசார் அப்பகுதியில் கஞ்சா விற்ற கும்பலை கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

தேனி:

தேனி அருகே போடேந்தி ரபுரம் மயான அணைமேட்டு பகுதியில் வீரபாண்டி போலீசார்ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அசோக்குமார் (வயது21) என்பவர் கஞ்சாவுடன் வந்தார். அவரை கைது செய்து அவரிடம் இருந்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

கோம்பை போலீசார் ரோந்து சென்ற போது கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட சூர்யா (22) என்பவரை கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய கோபி, விக்னேஷ், புவனேஸ்வரன் ஆகியோரை தேடி வரு கின்றனர்.

உத்தமபாளையம் போலீ சார் சின்னமனூர் பைபாஸ் சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது 2 பைக்கில் கஞ்சா கடத்திய கம்பத்தை சேர்ந்த படித்துரை (40), உத்தமபாளையத்தை சேர்ந்த சுரேஷ் (29) ஆகிய 2 பேரை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர். தப்பி ஓடிய மலைச்சாமி என்பவரை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News