உள்ளூர் செய்திகள்

காசிமேட்டில் கடலில் மாயமான 4 மீனவர்கள் மீட்பு

Published On 2022-06-28 08:56 GMT   |   Update On 2022-06-28 08:56 GMT
  • மாலையில் கரை திரும்ப வேண்டிய 4 மீனவர்களும் கரை திரும்பவில்லை.
  • காசிமேடு மீனவர்கள் விசைப்படகுகளில் சென்று பைபர் படகில் மாயமான 4 மீனவர்களையும் தேடி வந்தனர்.

ராயபுரம்:

காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று அதிகாலை 2 மணியளவில் புதுவண்ணாரப்பேட்டை சேர்ந்த தர்மலிங்கம் மற்றும் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த கமலநாதன், சக்தி, சம்பந்தம் ஆகிய 4 பேர் பைபர் படகில் மீன்பிடிக்க கடலுக்குள் சென்றனர்.

அவர்கள் வழக்கமாக 12 நாட்டிங்கல் மைல் தூரத்தில் மீன்பிடிப்பது வழக்கம். மாலையில் கரை திரும்ப வேண்டிய 4 மீனவர்களும் திரும்பவில்லை.

இதனால் பதட்டம் அடைந்த தர்மலிங்கத்தின் மகன் சந்திரசேகர் காசிமேடு மீன்பிடி துறைமுக போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

இதேபோல் மீன்வளத்துறை உதவி இயக்குனரக அலுவலகத்திலும் புகார் செய்யப்பட்டு உள்ளது.

காசிமேடு மீனவர்கள் விசைப்படகுகளில் சென்று பைபர் படகில் மாயமான 4 மீனவர்களையும் தேடி வந்தனர்.

இந்த நிலையில் நடுக்கடலில் விசைப்படகு மீனவர்கள் மீன்பிடித்து கொண்டு இருந்தபோது பைபர் படகில் என்ஜின் பழுதால் கரை திரும்ப முடியாமல் தர்மலிங்கம், கமலநாதன், சக்தி, சம்பந்தம் ஆகியோர் தத்தளித்தபடி இருப்பதை கண்டனர்.

இதையடுத்து அவர்களை மீனவர்கள் மீட்டு கரைக்கு அழைத்து வந்து கொண்டு இருக்கிறார்கள். இதனால் மீனவர்களின் குடும்பத்தினர் நிம்மதி அடைந்து உள்ளனர்.

Tags:    

Similar News