உள்ளூர் செய்திகள்

அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமடைந்த பெண். அருகில் மருத்துவர்கள் நர்சுகள் உள்ளனர்.

செவி திறன் குறைபாடு உள்ள பெண்ணுக்கு அரசு மருத்துவமனையில் நவீன சிகிச்சை

Published On 2022-06-29 09:57 GMT   |   Update On 2022-06-29 09:57 GMT
  • குடும்ப சூழல் காரணமாக மேல் சிகிச்சைக்காக பணம் இல்லாததால் பென்னாகரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கபட்டது.
  • காதில் சீழ் வடிதல் பிரச்சனையுடன் அவதிப்பட்டு வந்த கமலா தற்போது நலமுடன் உள்ளார்.

தருமபுரி,

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை இயங்கி வருகிறது. நாள்தோறும் ஏராளமான நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஜக்கம்பட்டி பகுதியை சேர்ந்த மணிமாறன் மனைவி கமலா வயது (55) இவரது காது செவித்திறன் குறைபாடு மற்றும் காதில் சீழ் வடிதல் போன்ற பிரச்சனைகளால் சிரமப்பட்டு வந்தார்.

சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் குடும்ப சூழல் காரணமாக மேல் சிகிச்சைக்காக பணம் இல்லாததால் பென்னாகரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கபட்டது.

இந்நிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு கமலாவிற்கு காது-மூக்கு-தொண்டை நிபுணரும் மருத்துவருமான பாலாஜி பரிசோதனை மேற்கொண்டு சி.டி. ஸ்கேன் ரத்த பரிசோதனை ஆகிய சோதனைகளை செய்து இவருக்கு இடை செவி என்ற பிரச்சனை மற்றும் உள்புற எலும்பில் தொற்றுநோய் ஏற்பட்டுள்ளது.

கண்டறியப்பட்டு அரசு மருத்துவமனை இணை இயக்குனர் அறிவுறுத்தலின் பேரில் பென்னாகரம் அரசு தலைமை மருத்துவமனை தலைமை மருத்துவர் முன்னிலையில் அறுவை சிகிச்சை செய்தனர்.

அறுவை சிகிச்சை சுமார் மூன்று மணி நேரம் நடைபெற்ற பின்னர் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை முடிக்கப்பட்டு காது கேளாமை பிரச்சினை மற்றும் காதில் சீழ் வடிதல் பிரச்சனையுடன் அவதிப்பட்டு வந்த கமலா தற்போது நலமுடன் உள்ளார்.

Similar News