உள்ளூர் செய்திகள்

போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

திண்டுக்கல்லில் உணவு பாதுகாப்பு விழிப்புணர்வு

Update: 2022-08-10 07:25 GMT
  • தமிழ்நாடு உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை சார்பாக விழிப்புணர்வு போட்டிகள் நடைபெற்றது.
  • பங்கேற்று வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

திண்டுக்கல்:

திண்டுக்கல் பார்வதீஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ்நாடு உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை சார்பாக விழிப்புணர்வு போட்டிகள் நடைபெற்றது.

பாரம்பரிய உணவே பண்பாட்டின் அடையாளம் உள்ளிட்ட தலைப்பில் பேச்சுப்போட்டி, சரியான உணவு, சுகமான வாழ்வு என்ற தலைப்பில் கவிதைப்போட்டி மேலும் சொற்றொடர் முழக்கப்போட்டி, ஓவியப்போட்டி நடைபெற்றது.

இதில் பங்கேற்று வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பேராசிரியர்கள் பத்மபிரியா மற்றும் ஹரிபிரசாத் ஆகியோர் செய்திருந்தனர்.

Tags:    

Similar News