உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்

ஆண்டிபட்டி அருகே அரசு பஸ் மோதி விவசாயி பலி

Update: 2022-07-02 03:59 GMT
  • மோட்டார் சைக்கிளில் சென்றபோது பின்னல் வேகமாக வந்த அரசு பஸ் அவர் மீது மோதியது.
  • விபத்தில் விவசாயி பலியானது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆண்டிபட்டி:

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே தொட்டப்பநாயக்கனூர் இ.புதுப்பட்டியை சேர்ந்தவர் பாண்டியராஜன் (வயது56). இவர் வெண்டைக்காய் சாகுபடி செய்து திம்மரசநாயக்கனூரில் உள்ள எக்ஸ்போட் கம்பெனிக்கு அனுப்பி வருகிறார்.

சம்பவத்தன்று இது தொடர்பாக பேசுவதற்கா திம்மரசநாயக்கனூர் சென்றார். மதுரை- ஆண்டிபட்டி தேசிய நெடுஞ்சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று ெகாண்டிருந்தார். அப்போது பின்னல் வேகமாக வந்த அரசு பஸ் அவர் மீது மோதியது.

இதில் பலத்த காயம் அடைந்த பாண்டியராஜன் தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து ஆண்டிபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

கம்பம் மாலையம்மாள்பு–ரத்தை சேர்ந்தவர் செல்வம் (25). இவர் பஞ்சர் கடை வைத்து நடத்தி வந்தார். சம்பவத்தன்று தனது மோட்டார் சைக்கிளில் கம்பம்- உத்தமபாளையம் சாலையில் சென்று கொண்டிருந்தார். அரசு போக்குவரத்துக்கழக டிப்போ அருகே சென்றபோது திடீரென நிலைதடுமாறி கீழே வந்தார்.

இதில் காயம் அடைந்த அவரை தேனி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி செல்வம் உயிரிழந்தார். இது குறித்து கம்பம் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News