உள்ளூர் செய்திகள்

கத்தரி நாற்றுக்கள்

விவசாயிகளுக்கு வீரிய ஒட்டு ரக காய்கறி நாற்றுகள் விநியோகம்

Update: 2022-08-13 10:27 GMT
  • அரசு தோட்டக்கலை பண்ணை, ஆடுதுறையில் கத்தரி வீரிய ஒட்டு ரக குழித்தட்டு நாற்றுகள் 3 லட்சம் எண்கள் இருப்பு உள்ளது.
  • மா நெருக்கு ஒட்டு கன்றுகள் 8 ஆயிரம் எண்களும், மா குருத்து ஒட்டு கன்றுகள் 4 ஆயிரம் எண்களும், மல்லிகை வேர்குச்சிகள் 15000 எண்களும், தேக்கு 25000 எண்களும் விவசாயிகளுக்கு விநியோகம் செய்ய தயார் நிலையில் உள்ளது.

தஞ்சாவூர்:

தஞ்சாவூர் மாவட்டம் மருங்குளம் மற்றும் ஆடுதுறை அரசு தோட்டக்கலை பண்ணைகளில் வீரிய ஒட்டு ரக காய்கறி நாற்றுகள் குழித்தட்டுகளில் உற்பத்தி செய்யப்பட்டு தேசிய தோட்டக்கலை இயக்கம், தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டம் ஆகிய திட்டங்களின் கீழ் விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

குறிப்பாக கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட கிராமங்களில் 80 சதவீதம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

தற்போது மருங்குளம் அரசு தோட்டக்கலை பண்ணையில் கத்தரி வீரிய ரக குழித்தட்டு நாற்றுகளும் மிளகாயில் வீரிய ரக குழித்தட்டு நாற்றுகளும் தலா 50 ஆயிரம் நாற்றுகள் இருப்பு உள்ளது. மேலும் மா நெருக்கு ஒட்டு கன்றுகள் 8 ஆயிரம் எண்களும், மா குருத்து ஒட்டு கன்றுகள் 4 ஆயிரம் எண்களும், மல்லிகை வேர்குச்சிகள் 15000 எண்களும், தேக்கு 25000 எண்களும் விவசாயிகளுக்கு விநியோகம் செய்ய தயார் நிலையில் உள்ளது.

அரசு தோட்டக்கலை பண்ணை, ஆடுதுறையில் கத்தரி வீரிய ஒட்டு ரக குழித்தட்டு நாற்றுகள் 3 லட்சம் எண்கள் இருப்பு உள்ளது. மேலும் துளசி, கற்றாழை, ரணகல்லி உள்ளிட்ட மருத்துவ செடிகள் 3000 எண்கள் மற்றும் மா நெருக்கு, குருத்து ஒட்டு கன்றுகள் 2000 எண்களும் விற்பனைக்கு உள்ளதால் தேவைப்படும் விவசாயிகள் தங்களது வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளலாம்.

மேற்கண்ட தகவலை தஞ்சாவூர் தோட்டக்கலை துணை இயக்குநர் எஸ்.கலைச்செல்வன் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News