உள்ளூர் செய்திகள்

திண்டுக்கல் சுதந்திரபோராட்ட நூற்றாண்டு நினைவு வளைவு புதுப்பிக்கப்பட்டுள்ளதையும் காந்தி திடல் கேட்பாரற்று கிடப்பதையும் படத்தில் காணலாம்.

76-வது சுதந்திரதின விழா திண்டுக்கல் சுதந்திர போராட்ட நினைவு வளையம் புதுப்பிப்பு

Published On 2022-08-15 05:24 GMT   |   Update On 2022-08-15 05:24 GMT
  • மாநகராட்சி நிர்வாகம் சார்பில் நூற்றாண்டு வளைவில் சிமிண்ட் மூலம் பூசி புதிய வண்ணங்கள் தீட்டும் பணியில் ஊழியர்களை ஈடுபடுத்தினர்.
  • இதனால் தற்போது நூற்றாண்டு நினைவு வளைவு புத்தம் புது பொழிவுடன் ஜொலிக்கிறது.

திண்டுக்கல்:

திண்டுக்கல்லில் கடந்த 1857ம் ஆண்டு நடைபெற்ற சுதந்திர போராட்டத்தை நினைவு கூறும் வகையில் மலைக்கோட்டை செல்லும் நுழைவு வாயிலில் சுதந்திர போராட்ட நினைவு வளைவு மாநகராட்சி மூலம் கட்டப்பட்டது.

கடந்த 1957ம் ஆண்டு கட்டப்பட்ட இந்த நூற்றாண்டு வளைவு பல ஆண்டுகளாக பராமரிக்கப்படாமல் சிதிலமடைந்து வந்தது. 76-வது சுதந்திர தின விழா இன்று நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் நூற்றாண்டு நினைவு வளைவை பராமரிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் மாநகராட்சிக்கு கோரிக்கை விடுத்தனர்.

இதனையடுத்து மாநகராட்சி நிர்வாகம் சார்பில் நூற்றாண்டு வளைவில் ஏற்பட்டிருந்த உடைப்புகள், சிங்கம், சிற்பங்கள் உள்ளிட்டவற்றை சிமிண்ட் மூலம் பூசி புதிய வண்ணங்கள் தீட்டும் பணியில் ஊழியர்களை ஈடுபடுத்தினர்.

மேலும் காந்தியடிகள் தொடர்பான கல்வெட்டுகள் இருந்த பகுதியில் கிடந்த குப்பைகள் அகற்றப்பட்டு சுத்தப்படுத்தப்பட்டன. இதனால் தற்போது நூற்றாண்டு நினைவு வளைவு புத்தம் புது பொழிவுடன் ஜொலிக்கிறது.

இதற்கு பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். ஆனால் அதே வேளையில் திண்டுக்கல் நகரில் காந்தியடிகள் வந்து சென்ற அடையாளங்களுள் ஒன்றாக திகழும் காந்திமேடை சுத்தப்படுத்தப்படாமல் இருந்தது. சுதந்திர தினம் கொண்டாடப்படும் இந்த நாளிலாவது அப்பகுதியை சுத்தப்படுத்தி தேசிய கொடி ஏற்றி வைக்க யாரும் முன் வரவில்லை என்பது வேதனை அளிப்பதாக இருந்தது.

Tags:    

Similar News