உள்ளூர் செய்திகள்

தருமபுரி நகரில் குட்கா, புகையிலை பொருட்கள் விற்ற 3 பேர் கைது

Update: 2022-06-28 09:27 GMT
  • நகர பகுதிகளில் உள்ள கடைகளில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
  • 3 பேர் கடைகளில் திருட்டுத்தனமாக தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை பொருட்கள் விற்பனை.

தருமபுரி, 

தருமபுரியில் தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை பொருட்களை திருட்டுத்தனமாக விற்பதாக சில கடைக்காரர்கள் மீது புகார்கள் வந்தது.

அதன் பேரில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன் உத்தரவின் பேரில் நகர போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி, பெருமாள் மற்றும் போலீசார் நகர பகுதிகளில் உள்ள கடைகளில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

அப்போது வெள்ளிப் பேட்டை பகுதியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி(57), பெருமாள் கோவில் பகுதியை சேர்ந்த ஜெயமூர்த்தி(57), ஆத்துமேடு பகுதியை சேர்ந்த ஜெயசீலன் (40) ஆகிய 3 பேர் கடைகளில் திருட்டுத்தனமாக தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை பொருட்களை விற்பது தெரிய வந்தது.

3 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 500 பாக்கட் குட்கா, புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

Similar News