உள்ளூர் செய்திகள்

ரோப்கார் பெட்டியில் அமர்ந்து பயணம் செய்த பக்தர்கள்.

பழனி முருகன் கோவிலில் புதிய ரோப்கார் பெட்டிகளில் அமர்ந்து பக்தர்கள் பயணம் நவீன வடிவமைப்பால் நெகிழ்ச்சி

Published On 2022-08-18 05:51 GMT   |   Update On 2022-08-18 05:51 GMT
  • ரோப்கார் நிலையத்தில் இருந்து மலைக்கோவில் செல்ல 4 பெட்டிகள் வீதம் 8 பெட்டிகள் உள்ளன.
  • ரோப்கார் பெட்டியில் ஒரு கதவு மட்டுமே இருக்கும். தற்போது புதிதாக வாங்கப்பட்ட பெட்டியில் 2 கதவுகள் உள்ளதால் பக்தர்கள் சிரமமின்றி உள்ளே வரவும், வெளியே செல்லவும் எளிதாக உள்ளது என்று மகிழ்ச்சி தெரிவித்தனர்.

பழனி:

அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி கோவிலுக்கு வரும் பக்தர்கள் அடிவாரத்தில் இருந்து மலைகோவிலுக்கு எளிதாக சென்று வர ரோப்கார் மற்றும் மின்இழுவை ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இதில் கிழக்கு கிரிவீதியில் உள்ள ரோப்கார் நிலையத்தில் இருந்து மலைக்கோவில் செல்ல 4 பெட்டிகள் வீதம் 8 பெட்டிகள் உள்ளன.

பராமரிப்பு பணிகள் நிறைவடைந்த நிலையில் கடந்த வாரம் சோதனை ஓட்டம் நடைபெற்றது. கரூரில் இருந்து புதிதாக 10 ரோப்கார் பெட்டிகள் வாங்கப்பட்டன. இதனைதொடர்ந்து பழைய பெட்டிகள் அகற்றப்பட்டு புதிய பெட்டிகள் பொருத்தப்பட்டு நேற்று சோதனை ஓட்டம் நடைபெற்றது. இன்று அந்த பெட்டிகளில் பக்தர்கள் அமர்ந்து பயணம் செய்தனர்.

ஏற்கனவே உள்ள ரோப்கார் பெட்டியில் ஒரு கதவு மட்டுமே இருக்கும். தற்போது புதிதாக வாங்கப்பட்ட பெட்டியில் 2 கதவுகள் உள்ளது. இதனால் பக்தர்கள் சிரமமின்றி உள்ளே வரவும், வெளியே செல்லவும் எளிதாக உள்ளது என்று மகிழ்ச்சி தெரிவித்தனர். மேலும் பழைய ரோப்கார் பெட்டியில் 4 பேர் அமர்ந்து செல்லும்போது நெருக்கடியான சூழல் ஏற்படும். தற்போது விசாலமாக இருக்கைகள் உள்ளதால் நன்றாக உள்ளது என பக்தர்கள் தெரிவித்தனர்.

தற்போது வரை புதிதாக வந்த 4 பெட்டிகள் ரோப்காரில் பொருத்தப்பட்டுள்ளது. இதனைதொடர்ந்து மற்ற 4 பெட்டிகளும் அடுத்தடுத்து பொருத்தப்பட்டு அதில் பயணிகள் அமர்ந்து செல்லும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. புதிதாக வந்துள்ள ரோப்கார் பெட்டிகள் பக்தர்கள் மனம் விரும்பும் வகையில் உள்ளதால் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News