உள்ளூர் செய்திகள்

சுதந்திரதின விழா தொடர்பான ஆலோசனை கூட்டம் கலெக்டர் முரளிதரன் தலைமையில் நடைபெற்றது.

தேனி மாவட்டத்தில் 75-வது இந்திய சுதந்திர தினவிழா தொடர்பான ஆலோசனை கூட்டம்

Published On 2022-08-09 05:05 GMT   |   Update On 2022-08-09 05:05 GMT
  • 75-வது இந்திய சுதந்திர தினவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்து, அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆலோசனைக்கூட்டம் தேனி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கலெக்டர்தலைமையில் நடைபெற்றது.
  • விழாவிற்கான அழைப்பிதழ் அச்சிடுதல், சுதந்திர போராட்ட தியாகிகள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளை விழாவிற்கு அழைத்தல் தொடர்பாக அதிகாரி களுடன் ஆலோசனை நடத்தப்பட்டது.

தேனி:

75-வது இந்திய சுதந்திர தினவிழா கொண்டாடுவது தொடர்பான முன்னேற்பாடு பணிகள் குறித்து, அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆலோசனைக்கூட்டம் தேனி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கலெக்டர் முரளிதரன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் கலெக்டர் தெரிவித்ததாவது:-

75-வது இந்திய சுதந்திர தினவிழாவினை முன்னிட்டு விழாவிற்கான அழைப்பிதழ் அச்சிடுதல், சுதந்திர போராட்ட தியாகிகள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளை விழாவிற்கு அழைத்தல் தொடர்பாக அதிகாரி களுடன் ஆலோசனை நடத்தப்பட்டது.

மேலும் விழா நடைபெறும் மாவட்ட விளையாட்டு மைதானத்தை மேடு பள்ளம் இல்லாமல் சமதளமாக தயார்படுத்துதல், விழா மேடை மற்றும் பந்தல் அமைத்தல், விழாவிற்கு வருகை தருகின்ற சுதந்திர போராட்ட தியாகிகள் மற்றும் அவர்களது வாரிசுகளுக்கு உரிய மரியாதை செலுத்துதல்,

பல்வேறு துறைகளின் சார்பில் அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்கான பயனாளிகளின் பெயர் பட்டியல் தயார் செய்தல், சிறப்பாக பணியாற்றக் கூடிய அலுவலர்கள், பணியாளர்களை கண்டறிந்து அவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்குவதற்கான பட்டியல்களை தயார் செய்தல் போன்ற பணிகளை தங்களுக்கு ஒதுக்கீடு செய்ய ப்பட்டுள்ள அட்டவ ணைப்படி சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும்.

மேலும் காவல்துறை, தீயணைப்புத்துறை, தேசிய மாணவர் படை, தேசிய சமூக நலப்பணி படை, ஊர்க்காவல் படை சார்பில் அணி வகுப்பு மரியாதை செய்தல், விழா நடைபெறும் இடத்தில் போதுமான அளவில் குடிநீர் வசதி, கழிப்பறை வசதி, போக்குவரத்து வசதி, போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்தல், மேலும், சுதந்திர தின விழாப்பணிகளை வருவாய்த்துறை, காவல் துறை, ஊரக வளர்ச்சித்துறை, போக்குவரத்துத்துறை, பொதுப்பணித்துறை மற்றும் அனைத்து த்துறை அலுவல ர்களுடன் ஒருங்கிணைந்து பணியாற்றிட வேண்டும் என தெரிவித்தார்.

Tags:    

Similar News